[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இனி வியாழக்கிழமை தோறும் டெங்கு ஒழிப்பு தினம் - சுகாதாரத்துறை
  • BREAKING-NEWS மழையால் புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு
  • BREAKING-NEWS பாகிஸ்தானுக்கு இனி இந்திய தண்ணீர் கிடையாது: ஹரியானா தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி திட்டவட்டம்
  • BREAKING-NEWS உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு
  • BREAKING-NEWS கீழடியில் 5-ம் கட்ட ஆய்வுக்காக தோண்டப்பட்ட 54 குழிகள் இன்று மூடப்படுகின்றன
  • BREAKING-NEWS டாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது

வேண்டுமென்றே ஆஜராகாமல் இருந்தீர்களா?: விஷாலிடம் கேள்வி எழுப்பிய நீதிபதி..!

actor-vishal-surrender-in-court

சரக்கு மற்றும் சேவை வரித்துறை தொடர்ந்த வழக்கில் நடிகர் விஷால் எழும்பூர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி நீதிபதியின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.

நடிகர் விஷாலுக்கு சொந்தமான விஷால் பிலிம் பேக்டரி செலுத்த வேண்டிய சேவை வரி தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கமளிக்க சரக்கு மற்றும் சேவை வரித்துறை அதிகாரி, விஷாலுக்கு சம்மன் அனுப்பினார். இந்த சம்மனை ஏற்று ஆஜராகாமல் இருந்ததாக, விஷாலுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நீதிபதி ஹெர்மிஸ் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, விசாரணைக்கு நடிகர் விஷால் நேரில் ஆஜராகியிருந்தார். அப்போது, நீதிபதி வேண்டுமென்றே சம்மனை பெறவில்லையா? வேண்டுமென்றே ஆஜராகாமல் இருந்தீர்களா?  என விஷாலிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு அரசுத்தரப்பில் கூறப்படும் இந்த குற்றச்சாட்டுக்களை மறுப்பதாக விஷால் தெரிவித்தார். இந்த விசாரணை முடிவடைந்ததை அடுத்து, வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணையை நீதிபதி ஹெர்மிஸ், நவம்பர் 11-ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close