தமிழகத்தின் பாரம்பரிய உடைகளான வேட்டி, சட்டையில் பிரதமர் மோடி மாமல்லபுரம் வந்தடைந்தார்.
சீன அதிபர் ஷி ஜின்பிங்கை மாமல்லபுரத்தில், பிரதமர் நரேந்திர மோடி சந்திக்கவுள்ளார். அதற்காக, டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் காலை 11 மணியளவில் சென்னை விமான நிலையத்திற்கு மோடி வந்து சேர்ந்தார். அவரை, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் பொன்னாடை போர்த்தி வரவேற்றனர்.
வரவேற்பு உபசரிப்புகள் முடிந்தபின், சென்னை விமான நிலையத்திலிருந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலம் மோடி திருவிடந்தைக்கு சென்றார். அங்கு பாரதிய ஜனதா சார்பில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. திருவிடந்தையிலிருந்து கோவளத்திற்கு மோடி காரில் புறப்பட்ட போது, சாலையின் இருபுறமும் திரண்டிருந்த பாரதிய ஜனதா கட்சியினர் பிரதமர் மோடியை வரவேற்று முழக்கமிட்டனர்.
இன்னும் சற்று நேரத்தில் பிரதமர் மோடியும், சீன அதிபர் ஷி ஜின்பிங்கும் மாமல்லப்புரத்தில் சந்திக்க உள்ளனர். இதற்காக தமிழகத்தின் பாரம்பரிய உடைகளான வேட்டி, சட்டையில் பிரதமர் மோடி மாமல்லபுரம் வந்தடைந்தார். வேட்டி, சட்டை மட்டுமில்லாமல் தோளில் துண்டுடன் பிரதமர் மோடி காணப்பட்டார். தமிழகத்தின் பாரம்பரிய உடையணிந்த பிரதமர் மோடிக்கு பலதரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிகின்றன.
‘கேப்மாரி’ படத்திற்குத் தடை கோரிய மனு தள்ளுபடி
ஒரே ஆண்டில் 3 ஆவது முறையாக தேர்தலை சந்திக்கும் இஸ்ரேல்
இனப்படுகொலை குற்றச்சாட்டு: சர்வதேச நீதிமன்றத்தில் ஆங் சான் சூச்சி மறுப்பு
ஆற்றில் புகுந்த முதலைகள் - மீன்பிடித் தொழிலாளர்கள் அச்சம்..!
பாம்பு கடித்து 4 வயது சிறுவன் உயிரிழப்பு - மருத்துவமனை மீது பெற்றோர் குற்றச்சாட்டு