[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தென்னாப்ரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சதமடித்தார் ரோகித் ஷர்மா
  • BREAKING-NEWS காங்கிரஸ் அரசு முடக்கி வைத்திருந்த தேஜாஸ் போர் விமானம் பாதுகாப்பு படையில் சேவையாற்ற தயாராக உள்ளது - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS நாங்குநேரியில் பணப்பட்டுவாடா செய்ததாக இதுவரை 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன - நெல்லை ஆட்சியர்
  • BREAKING-NEWS தமிழகம், புதுச்சேரியில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS திருச்சி பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடித்த நகைகளை முருகன் கும்பல் உருக்கி விற்றது அம்பலம்

மாணவிக்கு பாலியல் வன்கொடுமை - பாஜக பிரமுகர் கைது

bjp-local-leader-arrested-in-sexual-assault-case-at-sivagangai

சிவகங்கை மாவட்டத்தில் பாலியல் வழக்கு ஒன்றில் பாஜக பிரமுகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிவகங்கை மேலூர் சாலை பொதிகை நகரை சேர்ந்தவர் சிவகுரு துரைராஜ் (61). இவர் சிவகங்கை மதுரை முக்கு பகுதியில் செவிலியர் பயிற்சி மற்றும் கேட்டரிங் தொழிற்படிப்பு நிறுவனம் நடத்தி வருகிறார். மேலும் இவர் பாரதிய ஜனதா கட்சியின் சிவகங்கை மாவட்ட கலை மற்றும் கலாச்சார பிரிவு தலைவராகவும் இருந்து வருகிறார். இவரது செவிலியர் பயிற்சி நிறுவனத்தில் 19 வயது மாணவி ஒருவர் படித்து வந்தார். 

இந்நிலையில் சிவகுரு துரைராஜ் மாணவியிடம் தனக்கு சாதகமாக நடந்தால் கூடுதலாக உள்ளீட்டு மதிப்பெண் போடுவதாக கூறி, பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. மாணவியின் நடவடிக்கையில் மாற்றத்தை உணர்ந்த பெற்றோர்கள் மாணவியிடம் விசாரித்துள்ளனர். இதில் சிவகுரு துரைராஜ் தன்னிடம் தவறாக நடந்ததை கூறியுள்ளார். 

இதனையடுத்து சிவகங்கை நகர காவல் நிலையத்தில் பாலியல் புகார் அளிக்கப்பட்டது. மாணவியின் தாய் கொடுத்த புகாரையடுத்து,  பாலியல் வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து, சிவகுரு துரைராஜை கைது செய்த நகர காவல் நிலைய ஆய்வாளர் மோகன் சம்பவம் குறித்து சிவகுருவிடம் மேல் விசாரணை நடத்தி வருகிறார்.
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close