ஆன்லைன் சில்லறை காய்கறி வர்த்தகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கோயம்பேட்டில் காய்கறி வியாபாரிகள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நிஞ்ஜா கார்ட், உடான் போன்ற ஆன்லைன் நிறுவனங்கள் மொத்த விலைக்கு காய்கறியை வாங்கி அதனை தனது வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்கிறது. அத்துடன் மீதம் உள்ள பழைய காய்கறிகளை கோயம்பேடு மார்க்கெட்டில் உரிமம் இல்லாத கடைகளிடம் குறைந்த விலைக்கு அவை விற்கின்றன. இதனால் உரிமம் உள்ள 2,200 வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் சுகாதாரமற்ற காய்கறிகளை குறைந்த விலைக்கு விற்பனை செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில் கோயம்பேட்டில் உள்ள 27 வியாபாரிகள் மற்றும் தொழிலாளர் சங்கங்கத்தினர் இணைந்து இன்று காலை 5 மணியில் இருந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கோயம்பேடு மார்க்கெட் முதன்மை நிர்வாக அலுவலகர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட உள்ளனர். இதுவரை ஐந்து ஆன்லைன் காய்கறி விற்பனை வாகனங்கள் சிறை பிடிக்கப்பட்டுள்ளன.
‘கேப்மாரி’ படத்திற்குத் தடை கோரிய மனு தள்ளுபடி
ஒரே ஆண்டில் 3 ஆவது முறையாக தேர்தலை சந்திக்கும் இஸ்ரேல்
இனப்படுகொலை குற்றச்சாட்டு: சர்வதேச நீதிமன்றத்தில் ஆங் சான் சூச்சி மறுப்பு
ஆற்றில் புகுந்த முதலைகள் - மீன்பிடித் தொழிலாளர்கள் அச்சம்..!
பாம்பு கடித்து 4 வயது சிறுவன் உயிரிழப்பு - மருத்துவமனை மீது பெற்றோர் குற்றச்சாட்டு