[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS நாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS தொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS புரோ‌ கபடி லீக் தொடரில் பெங்கால் ‌வாரியர்ஸ் அணி ‌முதல் முறையாக சாம்பியன்‌. இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.

"நான் நினைச்சா உன்ன கொன்னே புடுவேன்" எஸ்.ஐ.க்கு மிரட்டல் விடுத்த ரவுடி 

rowdy-threaten-to-sub-inspector-of-kovilpatti

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உதவி ஆய்வாளரை ரவுடி மிரட்டும் ஆடியோ வாட்ஸ்அப்பில் வெளியாகியுள்ளது.

தூத்துக்குடி மாவட்ட கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் இசக்கி ராஜா. இவர் சில மாதங்களுக்கு முன்பு ரவுடிகளுக்கு எதிராக எச்சரிக்கை செய்து வெளியிட்ட ஆடியோ சமூக வலைத்தளத்தில் வைரலானது. 

இந்நிலையில், ரவுடி மாடசாமி என்பவர் உதவி ஆய்வாளர் இசக்கி ராஜாவை மிரட்டும் ஆடியோ வாட்ஸ் அப்பில் வெளியாகியுள்ளது. அதில் ரவுடி மாடசாமி பேசுகையில், “இன்னைக்கு எஸ்.ஐ. ஆனதும் பெரிய ஆளாக ஆக முடியாது. நான் பாரக்கொட்டை மாடசாமி பேசுறேன். என் பட்ட பெயர் உனக்கு தெரியும். உன்னுடைய அப்பாவை 1998ல் வெட்டினேன். என் காலை வெட்டுவேன் என்று என் அண்ணனிடம் சொல்லியிருக்க. உன் கற்பனையில் கூட நினைக்காத. நான் நினைச்சா உன்ன கொன்னே புடுவேன். நீ இருக்க நிலையை பார்த்து விடுறேன். நீ போட்டிருக்க டிரெஸ்க்காக” என மிரட்டியுள்ளார். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close