[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தோனேசியாவைத் தாக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம். 7.4 ரிக்டர் அளவில் தாக்கிய நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை விடுப்பு
  • BREAKING-NEWS கும்பகோணத்தில்‌ பாதாளச்சாக்கடையில் தவறி விழுந்து தொழிலாளி உயிரிழப்பு
  • BREAKING-NEWS பயங்கரவாதத்தால் ஆண்டுக்கு 70 லட்சம் கோடி ரூபாய் இழப்பு: பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு

சிறை விதிகளை சசிகலா மீறியது உண்மை - விசாரணைக்குழு அறிக்கை

sasikala-broke-jail-rules-information-is-fact-report

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து விதிமீறி சசிகலா வெளியே சென்றது குறித்து காவல் அதிகாரி ரூபா கூறிய புகார் உண்மையே என விசாரணைக் குழு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

பெங்களூரு சிறையில் இருந்து சசிகலா விதிகளை மீறி வெளியே சென்றதாகவும், அவருக்கு சிறையில் பிரத்யேக வசதிகள் செய்து தரப்பட்டதாகவும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அதிகாரியாக பணியாற்றிய ரூபா குற்றம்சாட்டியிருந்தார். இதற்காக சிறைத்துறை உயர் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியிருந்தார். 

இதுதொடர்பாக விசாரணை நடத்த ஐஏஎஸ் அதிகாரி வினய்குமார் தலைமையிலான விசாரணைக்குழு அமைக்கப்பட்டது. இந்நிலையில் விசாரணைக்குழு சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து விதிமீறி சசிகலா வெளியே சென்றது குறித்து காவல் அதிகாரி ரூபா கூறிய புகார் உணமை தான் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் சசிகலாவுக்காக சிறையில் சமையல் செய்யப்பட்டதும் உண்மை தான் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close