சென்னை சிட்லப்பாக்கம் அருகே வீட்டில் கொள்ளையடிக்க வந்த நபர், சிசிடிவி கேமரா இருப்பதைக் கண்டவுடன் தலையில் அடித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச்செல்லும் காட்சி வெளியாகியுள்ளது.
ஜெயா நகரைச் சேர்ந்த ஸ்ரீதர் என்பவர் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். இவரது வீட்டில் யாரும் இல்லாததையறிந்து, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கடந்த 25ஆம் தேதி கொள்ளையடிக்க முயன்றார். வீட்டின் வெளிக்கதவை லாவகமாக திறந்த அந்த நபர், உள்கதவை திறப்பதற்காக அங்குள்ள ஜன்னலில் வைத்திருந்த இரும்புக் கம்பியை எடுத்து வந்தார்.
அப்போது, வீட்டின் முன் சிசிடிவி கேமரா இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். மாட்டிக் கொண்டோம் என்ற அச்சத்தில் தலையில் அடித்துக் கொண்ட அவர், எதையும் கொள்ளையடிக்காமல் அங்கிருந்து தப்பிச் சென்றார். இந்த சிசிடிவி காட்சிகளைக் கொண்டு சிட்லப்பாக்கம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
‘பாலியல் வன்கொடுமை நடந்தபின் வா’ புகாரளிக்க வந்த பெண்ணை திருப்பி அனுப்பிய போலீசார்
டெல்லி தொழிற்சாலை தீ விபத்து: தலைமறைவாக இருந்த உரிமையாளர் கைது
"முத்துராமலிங்க தேவர் பெயரை சூட்ட ஓபிஎஸ், ஈபிஎஸ் தடையாக உள்ளனர்" சுப்ரமணியன் சுவாமி
உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் அறிவிப்பு
கர்ப்பிணி மனைவிக்காக நாற்காலியாக மாறிய கணவர் !