விழுப்புரத்தில் திருட வந்த வீட்டில் ஊஞ்சலாடி விட்டு சென்ற திருடனை கண்டுபிடித்து போலீஸார் சிறையில் அடைத்தனர்.
விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் சுதாகர் நகர் பகுதியில் வசிப்பவர் ஆசிரியர் இளங்கோ. இவர் வீட்டில் அவ்வப்போது சிறு சிறு திருடுகள் நடந்துள்ளன. இதனால் திருடனை கையும், களவுமாக பிடிக்க சிசிடிவி கேமராவை பொருத்தினார். இந்நிலையில் கடந்த மாதம் இவரது வீட்டிற்கு திருட வந்த ஒரு திருடன், அங்கு கட்டப்பட்டிருந்த ஊஞ்சலில் உல்லாசமாக அமர்ந்து ஓய்வெடுத்துவிட்டுச் சென்றான். இதை சிசிடிவி காட்சிகளில் கண்ட இளங்கோ அதிர்ச்சி அடைந்தார்.
(திருட வந்தபோது பதிவாகியிருந்த வீடியோ)
இதுதொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதைத்தொடர்ந்து பல்வேறு இடங்களில் காவல்துறையினர் சோதனை மேற்கொண்டதில், திருட வந்தது விழுப்புரம் மருதூர் பகுதியை சேர்ந்த சச்சிதானந்தம் என்று கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து திருடனை கைது செய்த போலீஸார், வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
செங்கல் இன்றி நீங்கள் விரும்பிய பட்ஜெட்டில் கான்கிரீட் வீடுகள்... அது எப்படி..?
துருப்பிடித்து ஓட்டை உடைசலாக மதுராந்தகம் ஏரி ஷட்டர்கள்.. நடவடிக்கை எடுக்குமா அரசு..?
காவல்நிலையம் எதிரே பெண்ணை தாக்கிய காவலர் கைது - தகாத உறவால் பிரச்னை
கர்நாடக இடைத்தேர்தல் முடிவுகள்: 6 இடங்களில் பாஜக முன்னிலை
மக்களவையில் இன்று தாக்கலாகிறது குடியுரிமை திருத்த மசோதா !
செங்கல் இன்றி நீங்கள் விரும்பிய பட்ஜெட்டில் கான்கிரீட் வீடுகள்... அது எப்படி..?
துருப்பிடித்து ஓட்டை உடைசலாக மதுராந்தகம் ஏரி ஷட்டர்கள்.. நடவடிக்கை எடுக்குமா அரசு..?
குடியுரிமை மசோதாவின் அம்சங்களும்... எதிர்ப்பு நிலவுவதற்கான காரணங்களும்..!
“ஆபாசப் படம் பார்த்த பட்டியலில் உங்கள் பெயர்..! ” - இளைஞர்களை மிரட்டும் போன் கால்..!