[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS நாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS தொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS புரோ‌ கபடி லீக் தொடரில் பெங்கால் ‌வாரியர்ஸ் அணி ‌முதல் முறையாக சாம்பியன்‌. இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.

ஒரே நாளில் மதுரை முழுவதும் 5 கிலோ கஞ்சா பறிமுதல்

5kg-kanja-seized-near-madurai

ஒரே நாளில் மதுரை மாவட்டம் முழுவதும் 5 கிலோ வரை கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம் முழுவதும் கஞ்சா விற்பனை அதிகளவில் நடைபெறுவதாக வந்த தகவலையடுத்து, மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காவல் துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். சோதனையில் திருப்பரங்குன்றம் தாலுகா அவனியாபுரம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இரண்டு இளைஞர்கள் கஞ்சா விற்பது தெரியவந்தது. அவர்கள் இருவரையும் கைது செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்து 2.4 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். அவர்கள் அவனியாபுரத்தை சேர்ந்த கிஷோர் (வயது 20) மற்றும் விஷ்வா (வயது 19) என்பது தெரியவந்தது.

மேலும் மதுரை மாவட்டத்திற்கு உட்பட்ட கீரத்துரை காவல் நிலையம் மற்றும் தெப்பக்குளம் காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் சேர்த்து 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில் 4 கிலோக்கு மேல் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதை அடுத்து மதுரை மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் முழுவதும் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close