[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இனி வியாழக்கிழமை தோறும் டெங்கு ஒழிப்பு தினம் - சுகாதாரத்துறை
  • BREAKING-NEWS மழையால் புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு
  • BREAKING-NEWS பாகிஸ்தானுக்கு இனி இந்திய தண்ணீர் கிடையாது: ஹரியானா தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி திட்டவட்டம்
  • BREAKING-NEWS உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு
  • BREAKING-NEWS கீழடியில் 5-ம் கட்ட ஆய்வுக்காக தோண்டப்பட்ட 54 குழிகள் இன்று மூடப்படுகின்றன
  • BREAKING-NEWS டாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது

அண்ணனை கட்டையால் அடித்து கொலை செய்த தம்பி கைது

man-murdered-his-brother

சொத்து தகராறில் அண்ணனை கட்டையால் அடித்து கொலை செய்த தம்பி கைது செய்யப்பட்டார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த சாசானூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா. இவருடைய மகன்கள் மூர்த்தி (வயது 32) மற்றும் சீனிவாசன் (வயது 27). மூர்த்திக்கு திருமணம் ஆகவில்லை. இருவரும் அருகருகே வீட்டில் வசித்து வருகின்றனர்.

நேற்று இரவு மூர்த்தி, தனது தம்பி சீனிவாசனிடம் குடிபோதையில் தங்களது சொத்தான ஒன்றரை ஏக்கர் நிலத்தை பிரித்து கொடு எனக் கேட்டு தகராறு செய்துள்ளார். அப்போது ஆத்திரமடைந்த சீனிவாசன் கட்டையால் அண்ணனின் தலையில் அடித்ததில் மூர்த்தி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

இது குறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த ஊத்தங்கரை போலீசார், இறந்த மூர்த்தி உடலை கைபற்றி ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர் .மேலும் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு சீனிவாசனை கைது செய்தனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close