[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இனி வியாழக்கிழமை தோறும் டெங்கு ஒழிப்பு தினம் - சுகாதாரத்துறை
  • BREAKING-NEWS மழையால் புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு
  • BREAKING-NEWS பாகிஸ்தானுக்கு இனி இந்திய தண்ணீர் கிடையாது: ஹரியானா தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி திட்டவட்டம்
  • BREAKING-NEWS உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு
  • BREAKING-NEWS கீழடியில் 5-ம் கட்ட ஆய்வுக்காக தோண்டப்பட்ட 54 குழிகள் இன்று மூடப்படுகின்றன
  • BREAKING-NEWS டாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது

மேகதாது அணை விவகாரம்: கர்நாடக அரசுக்கு ஸ்டாலின் கண்டனம்

mekedatu-dam-project-mk-stalin-condemn-karnataka-govt

மேகதாதுவில் அணை கட்ட தமிழக அரசிடம் ஆலோசனை நடத்த வேண்டியதில்லை என்று கர்நாடக அரசு கூறியிருப்பதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கர்நாடக முதல்வர் எடியூரப்பாவின் இந்த அணுகுமுறை இருமாநில மக்களிடையே நிலவும் நல்லுறவுக்கு எந்த வகையிலும் பயனளிக்காது எனத் தெரிவித்துள்ளார். கர்நாடகா அரசு கூறியிருப்பது தன்னிச்சையானது என்றும், மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் உரிமைகளை எதேச்சதிகாரமாக அத்துமீறி அபகரிக்கும் முயற்சி என்றும் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது என்பதை கர்நாடக அரசும், மத்திய அரசும் உணர்ந்திட வேண்டும் என்பதை குறிப்பிட்டுள்ள ஸ்டாலின், திட்டத்திற்கு அனுமதி கோரி அனுப்பப்பட்டுள்ள கடிதத்தை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் நிராகரிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் இருமாநில மக்களின் நல்லுறவு கருதி மேகதாது அணை கட்டும் திட்டத்தை கர்நாடக அரசு கைவிட வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close