[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS நாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS தொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS புரோ‌ கபடி லீக் தொடரில் பெங்கால் ‌வாரியர்ஸ் அணி ‌முதல் முறையாக சாம்பியன்‌. இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.

‘மேகதாது அணை கட்ட தமிழகத்தின் கருத்து தேவையில்லை’ - கர்நாடகா

no-need-tn-opinion-for-build-mekedatu-dam-karnataka

மேகதாது அணை கட்ட தமிழ்நாட்டின் கருத்து தேவையில்லை என கர்நாடகா மீண்டும் தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக அரசின் காவிரி நீர் நிர்வாக நிறுவனத்தின் சார்பில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதில், காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட, காவிரி நீரால் பயனடையும் தமிழகத்திடம் கருத்து கேட்கத் தேவை எழவில்லை என்று அதில் கூறப்பட்டுள்ளது. மேகதாது அணை கட்டுவதால் குறைந்த அளவிலான பகுதிகளே நீரில் மூழ்கும் என்றும், தமிழ்நாட்டுக்கு மாதந்தோறும் நிர்ணயிக்கப்பட்ட அளவு நீரை வழங்கவும் மேகதாது அணை அவசியமாகிறது என்றும் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

மைசூர் மாகாணத்துக்கும் மெட்ராஸ் மாகாணத்துக்கு ஏற்பட்ட ஒப்பந்தப்படி, காவிரியில் புதிய அணை கட்ட இருமாநிலமும் ஒப்புதல் வழங்க வேண்டும். அந்த ஒப்பந்த அடிப்படையிலேயே 2007-ஆம் ஆண்டு வெளியான காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பும் அமைந்துள்ளது. இந்நிலையில், மேகதாதுவில் அணை கட்டப் போவதாக கர்நாடக அரசு தொடர்ந்து கூறி வருகிறது.

கடந்த ஜூலையில் நடந்த காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் இது பற்றிய விவாதம் வந்தபோது, காவிரியில் மேகதாது அணை கட்ட தமிழக அரசு தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தையும் தமிழக அரசு அணுகியுள்ள நிலையில், மேகதாது அணை கட்ட சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் அனுமதி கேட்டு கர்நாடகா மீண்டும் கடிதம் எழுதியுள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close