[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இனி வியாழக்கிழமை தோறும் டெங்கு ஒழிப்பு தினம் - சுகாதாரத்துறை
  • BREAKING-NEWS மழையால் புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு
  • BREAKING-NEWS பாகிஸ்தானுக்கு இனி இந்திய தண்ணீர் கிடையாது: ஹரியானா தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி திட்டவட்டம்
  • BREAKING-NEWS உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு
  • BREAKING-NEWS கீழடியில் 5-ம் கட்ட ஆய்வுக்காக தோண்டப்பட்ட 54 குழிகள் இன்று மூடப்படுகின்றன
  • BREAKING-NEWS டாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது

“பிக்பாஸ் தேவையில்லாதது என்றால் அரசும் அப்படித்தான்” - கமல்ஹாசன்

big-boss-useless-means-same-like-tn-govt-kamal-hassan

பிக்பாஸ் சமுதாயத்திற்கு தேவையில்லாத நிகழ்ச்சி என்றால் அரசும் அப்படித்தான் இருக்கிறது என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

கமல்ஹாசன் தொடர்பாக அண்மையில் கருத்து தெரிவித்திருந்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், “வசூல் ராஜா எம்.பி.பி.எஸ் படம் மூலம் நீட் தேர்வில் ஆள் மாறாட்டத்திற்கு வித்திட்டவர் கமல்ஹாசன் என நகைச்சுவையாக தெரிவித்தார். மேலும் பிக்பாஸ் ஒரு கலாசார சீரழிவு. அந்த வீட்டுக்குள் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. பிக்பாஸ் இல்லம் ஒரு அலிபாபா குகைபோல உள்ளது” என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ஜெயக்குமாரின் கருத்துக்கு பதில் அளித்துள்ள கமல்ஹாசன், “பிக்பாஸ் சமுதாயத்திற்கு தேவையில்லாத நிகழ்ச்சி என்றால் அரசும் அப்படித்தான் இருக்கிறது. தமிழக ஆட்சியாளர்களை நான் வியாபாரிகளாகத்தான் பார்க்கிறேன். 

தமிழை பிரதமர் மோடி தொடர்ந்து உயர்த்திப் பேசுவது தமிழகத்தில் பாஜகவை வளர்ப்பதற்காகக் கூட இருக்கலாம். எங்கு சென்றாலும் அந்த இடத்திற்கு ஏற்ற போல் தொப்பி உள்ளிட்ட உடைகளை பிரதமர் மோடி அணிந்து கொள்வது போல தான் இதுவும்” என்று அவர் கூறியுள்ளார். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close