பிரதமர் மோடி, சீன அதிபர் ஜீ ஜின்பிங் ஆகியோரை வரவேற்று பேனர் வைக்க அனுமதி கோரி மத்திய - மாநில அரசுகள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்தியா - சீனா இடையிலான உறவு, வர்த்தக உறவு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்க இந்திய பிரதமர் நரேந்திர மோடியும், சீன அதிபத் ஜீ ஜின்பிங்கும், தமிழகத்தின் மாமல்லபுதத்தில் சந்தித்து பேசுகின்றனர். இந்த சந்திப்பு வரும் 11ம் தேதி முதல் 13ம் தேதி வரை நடக்கிறது.
சட்டவிரோதமாக பேனர்கள் வைக்க சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்திருந்தது. இருந்தும், சமீபத்தில் பேனர் விழுந்து இளம்பெண் சுபஸ்ரீ பலியானதைத் தொடர்ந்து, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கடும் கண்டனங்களை தெரிவித்திருந்தது.
இந்தச் சூழ்நிலையில், தமிழகத்துக்கு வருகை தரும் பிரதமர் மோடி, சீன அதிபர் ஜீ ஜின்பிங் உள்ளிட்டோரை வரவேற்று பேனர் வைக்க அனுமதி கோரி மத்திய வெளியுறவுத்துறை மற்றும் தமிழக அரசின் செய்தி மற்றும் தகவல் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை இயக்குனர் சார்பில் தமிழக நகராட்சி நிர்வாகத் துறை ஆணையர் பாஸ்கரன் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
தமிழகம் வரவுள்ள பிரதமர் மோடி மற்றும் சீன அதிபரை வரவேற்கும் வகையில் சென்னை விமான நிலையம் முதல் மாமல்லபுரம் வரை 14 இடங்களில் அக்டோபர் 9ம் தேதி முதல் அக்டோபர் 13-ம் தேதி வரையிலான ஐந்து நாட்களுக்கு அரசின் சார்பில் பேனர்கள் வைக்க அனுமதிக்க வேண்டுமென அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று, நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் சேஷசாயி அமர்வில், தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் முறையிட்டார்.
இந்த முறையை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், வழக்கை அக்டோபர் 3ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாகவும், ஏற்கனவே பேனர் வழக்கில் எதிர் மனுதாரராக உள்ளவர்களுக்கு நோட்டீஸ் அளிக்கும்படியும் உத்தரவிட்டனர்.
பொறியியல் படித்தவர்கள் டெட் எழுதி ஆசிரியர் ஆகலாம் - தமிழக அரசு
“நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணியை செய்யத் தயார்”-தமிழக கான்ஸ்டபிள் விருப்பம்
''அளவில் பெரியதாக இருக்கிறது'': வாங்க ஆள் இல்லாமல் கிடக்கும் எகிப்து வெங்காயம்!
குடியுரிமை சட்டத் திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றம்..!
திருவண்ணாமலையில் இன்று மாலை மகா தீபம்.. பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடு..!
“நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணியை செய்யத் தயார்”-தமிழக கான்ஸ்டபிள் விருப்பம்
“என்கவுன்ட்டர் மகிழ்ச்சியான விஷயம் அல்ல” - மௌனத்தை கலைத்த சமந்தா
‘வர்லாம் வர்லாம் வா...’.. 80 வயதிலும் தளராத மனம்.... யார் இந்த சுல்தான் தாத்தா..!
தாயின் குரலை முதன்முதலாக கேட்கும் குழந்தையின் ரியாக்ஷன்: மனங்களை வென்ற வீடியோ!