[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாமக்கலில் முட்டை கொள்முதல் விலை 10 காசு குறைந்து ரூ.4.08ஆக நிர்ணயம்
  • BREAKING-NEWS 2013-2017 வரை ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி வெற்றி பெற்றவர்களுக்கு மீண்டும் தேர்வு நடத்தப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் அமமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் நவ.24 முதல் 29ஆம் தேதி வரை மாவட்ட அமமுக அலுவலகங்களில் விருப்பமனு அளிக்கலாம் - டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS கோவையில் இளம்பெண் விபத்தில் சிக்கிய இடத்தில் கொடிக்கம்பம் ஏதும் இல்லை - உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்
  • BREAKING-NEWS எஸ்பிஜி பாதுகாப்பை விலக்கிக் கொள்ளும் மசோதாவை தாக்கல் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல்
  • BREAKING-NEWS இந்தியாவிலேயே அதிக மருத்துவர்கள் கொண்ட மாநிலங்களில் தமிழகம் 2வது இடம்; மகாராஷ்டிரா முதல் இடம் - மத்திய அரசு
  • BREAKING-NEWS சிவசேனா, தேசியவாத காங்., காங்கிரஸ் இணைந்து மகாராஷ்டிராவில் ஆட்சியமைத்தாலும் நிலைக்காது - நிதின் கட்கரி

சிறுவர்களுக்கு மது ஊற்றிக் கொடுப்பதுபோல பரவும் காட்சிகள்..! நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்..!

juvenile-drinks-alcohol

18 வயதுக்குட்பட்டவர்களுக்கு மது விற்கக் கூடாது என சட்டமே இருக்கும் நிலையில், 6 முதல் 10 வயது உள்ள இளஞ் சிறார்களுக்கு ஒருவர் மதுஊற்றிக் கொடுப்பதுபோல காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் சிறுவன் ஒருவனுக்கு மது ஊற்றிக்கொடுக்கும் காட்சி வெளியாகி பெரும் பரபரப்பு ஏற்பட்டது. காட்சிகளைக் கொண்டு விசாரணை நடத்திய காவல்துறையினர் சம்பந்தப்பட்ட நபரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்தநிலையில், சுமார் 6 முதல் 10 வயதுகுட்பட்ட சிறுவர்கள் ஒவ்வொருவருக்கும் மது ஊற்றிக் கொடுப்பது போல காட்சியும், அதை அந்த சிறுவர்கள் வாங்கி குடிக்கும் காட்சிகளும் தற்போது வேகமாக பரவி வருகிறது.

இந்திய தண்டனைச் சட்டப்படி 18 வயதுக்குட்பட்டோருக்கு மது வாங்கி கொடுத்தால், அவர்களை ஜாமீனில் வெளிவரமுடியாத பிரிவின் கீழ் கைது செய்து சிறையிலடைக்கலாம். அதன்படி, சிறுவர்களுக்கு மது ஊற்றிக் கொடுத்த நபர்களைக் கண்டறிந்து கைது செய்து சிறையிலடைக்க வேண்டும் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தியுள்ளனர்

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close