[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தெலங்கானா பெண் மருத்துவர் கொலை : 4 பேர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை
  • BREAKING-NEWS மறு உத்தரவு வரும் வரை உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுக்களை பெற வேண்டாம்: மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு
  • BREAKING-NEWS அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு என வெளியான செய்திகளில் உண்மையில்லை: தமிழக அரசு
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தல் வழக்கில் இன்று தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் இன்று தொடக்கம்

ரஜினியை சந்தித்து போட்டோ எடுக்கலாம் - 50 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்த நபர்

man-booked-in-fraud-case

நடிகர் ரஜினிகாந்தின் அதிதீவிர ரசிகர்களாக இருப்பவர்கள் எல்லாம், அவரை ஒருமுறையாவது நேரில் சந்திக்க வேண்டும், அவருடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆசையில் இருப்பார்கள். அவரது திரைப்படங்களை பார்த்து வளர்ந்தவர்களுக்கு நிச்சயம் அந்த ஆசை இருந்துக் கொண்டே இருக்கும். அவர்களது இந்த ஆசையை தூண்டிவிட்டு பண மோசடி செய்துள்ளார் ரஜினி பழனி என்பவர். 

சேலம் ரஜினி ரசிகர் மன்றத்தை சேர்ந்தவர் என கூறிக்கொள்ளும் ரஜினி பழனி என்பவர், வாட்ஸ்அப்-பில் குருப் ஆரம்பித்து ரஜினி ரசிகர்களை இணைத்துள்ளார். அவ்வப்போது ரஜினியை சந்திக்க செல்லாம் என கூறி, குரூப்பில் இருப்பவர்களிடம் பணம் பறித்து ஏமாற்றியுள்ளதாக கூறப்படுகிறது.

இதுவரை பலரிடம் சுமார் 50 லட்சம் ரூபாய் வரை பணம் பெற்று மோசடி செய்ததாக பழனி ரஜினி என்பவர் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ரஜினிகாந்தின் ரசிகைகள் புகார் அளித்துள்ளனர். ரஜினிகாந்தின் ரசிகைகளிடமிருந்து புகாரை பெற்ற காவல் ஆணையர் அலுவலகம், அவர்களை டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கும்படி அறிவுறுத்தியுள்ளனர்.

இது குறித்து பேசிய ரஜினி ரசிகை,  ரஜினிகாந்த் ரசிகர் மன்றத்துக்கும். மோசடி செய்த நபருக்கும் எந்த தொடர்பும் இல்லை என தெரிவித்துள்ளார்

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close