[X] Close
JUST IN
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலை சந்திக்க திமுகவுக்கு தெம்புள்ளதா என முதலமைச்சர் பழனிசாமி கேள்வி
  • BREAKING-NEWS தேசிய குடியுரிமை திருத்த மசோதாவை மக்களவையில் இன்று தாக்கல் செய்கிறார் அமித் ஷா
  • BREAKING-NEWS கிராமப்புற உள்ளாட்சிப் பதவிகளுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று தொடக்கம்

இன்றைய முக்கியச் செய்திகள்..!

today-headline-news-01102019

இந்திய விமானப்படை தளபதியாக ஏர் சீஃப் மார்ஷல் ஆர்.கே.எஸ் பதாரியா பதவியேற்பு. தேவைப்பட்டால் பாலகோட்டில் நடத்தியது போன்ற தாக்குதலை நடத்த தயார் நிலையில் இருப்பதாக பேட்டி.

உலகின் மிகப் பழமையான மொழிகளில் ஒன்று தமிழ் என சென்னை ஐஐடி விழாவில் பிரதமர் மோடி உரை. தமிழக மக்களின் உற்சாகத்துக்கு காலை நேர உணவான இட்லி, தோசை, சாம்பாரே காரணம் என பேச்சு.

தமிழகத்தில் முக்கியத் திட்டங்களை நிறைவேற்ற நிலுவையில் உள்ள 7,825 கோடியை தரவேண்டும். பிரதமர் மோடியை சந்தித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை.

இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் பாஜகவின் ஆதரவை கேட்கும் அதிமுக. தமிழக பாஜக மேலிடப் பொறுப்பாளர் முரளிதர் ராவுடன் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பேச்சு.

தொடர் கனமழையால் வடமாநிலங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணைக்கை 148 ஆக அதிகரிப்பு. 25 ஆண்டுகளில் அதிக அளவு பருவமழை இந்தாண்டு பெய்திருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கனமழை. அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை தொடர வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல்.

ஊராட்சி பள்ளியை சீரமைக்கக்கோரி 6 வயது மாணவி உயர் நீதிமன்றத்தில் வழக்கு. திருவள்ளூர் மாவட்ட கல்வி அதிகாரிகள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க நீதிபதிகள் உத்தரவு.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரமோற்சவம் கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. பல்லாயிரக்கணக்கானோர் பக்தி பரவசத்துடன் வழிபாடு.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close