[X] Close
JUST IN
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தல் நடந்தால் நான் போட்டியிடுவது பற்றி தலைமைதான் முடிவு எடுக்கும் - உதயநிதி ஸ்டாலின்
  • BREAKING-NEWS சேலம் மாவட்ட முன்னாள் ஆட்சியர் ரோஹிணி மத்திய உயர்கல்வித்துறை துணை செயலாளராக நியமனம்
  • BREAKING-NEWS தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
  • BREAKING-NEWS மகாராஷ்டிரா ஆளுநரை நாளை சந்திக்க சிவசேனா, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் முடிவு
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலை நிறுத்த திமுக முயற்சிக்கவில்லை: மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS ஐஐடியில் தற்கொலை செய்த மாணவி பாத்திமாவின் தந்தை இன்று முதல்வர் பழனிசாமியை சந்தித்து பேச உள்ளதாக தகவல்

உலக பிரசித்தி பெற்ற திருமலை பிரமோற்சவ விழா இன்று தொடக்கம்

tirumala-brahmotsavam-2019-begins-today

திருமலை திருப்பதியில் 9 நாள் நடக்கும் பிரமோற்சவ விழா இன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்குகிறது.

புரட்டாசி மாதத்தில் ஆண்டுதோறும் திருமலை திருப்பதியில் நடைபெறும் பிரமோற்சவ விழா உலக பிரசித்தி பெற்றது. இந்த ஆண்டுக்கான பிரமோற்சவ விழா கருட கொடியேற்றத்துடன் இன்று தொடங்கவுள்ளது. இதையொட்டி திருமலை முழுவதும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, வண்ணமயமான மின் விளக்குகளும் ஆங்காங்கே பொருத்தப்பட்டுள்ளன. இதனால் முழு திருமலையும் பூலோக வைகுண்டம் போல காட்சியளிக்கிறது.

பிரமோற்சவ விழாவுக்கான கொடி ஏற்றப்பட்டதும், ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ஏழுமலையானுக்கு அரசு சார்பில் பட்டு வஸ்திரம் சார்த்துகிறார். 9 நாட்கள் நடைபெறும் விழாவின்போது, இரு வேளைகளில் நான்கு மாட வீதிகள் வழியாக பல்வேறு வாகனங்களில் மலையப்ப சுவாமி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். முக்கிய நிகழ்வான கருட சேவை அக்டோபர் 4-ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் சுமார் 3 லட்சம் பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரமோற்சவத்தை முன்னிட்டு, இந்த முறை திருமலையில் முதல்முறையாக அத்திவரதர் சிலை வைக்கப்பட்டிருப்பது பக்தர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. பிரமோற்சவ விழாவில் பங்கேற்க நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் திருமலையில் குவிவார்கள் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பக்தர்களின் பொருட்கள் திருடு போவதை தடுப்பதற்காக கூடுதலாக ஆங்காங்கே கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், திருமலையில் இருந்து அனைத்து பகுதிகளுக்கும் கூடுதல் பேருந்துகளும் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close