[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
  • BREAKING-NEWS மகாராஷ்டிரா ஆளுநரை நாளை சந்திக்க சிவசேனா, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் முடிவு
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலை நிறுத்த திமுக முயற்சிக்கவில்லை: மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS ஐஐடியில் தற்கொலை செய்த மாணவி பாத்திமாவின் தந்தை இன்று முதல்வர் பழனிசாமியை சந்தித்து பேச உள்ளதாக தகவல்

“காவல்துறைக்கு தொழில்நுட்பங்கள் வாங்கியதில் ரூ.350 கோடி ஊழல்” - ஸ்டாலின்

350-rs-350-crore-corruption-in-procurement-of-technologies-for-police-mk-stalin

தமிழக காவல்துறைக்கு தகவல் தொழில்நுட்பச் சாதனங்கள் வாங்கியதில் 350 கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றுள்ளது அம்பலமாகியுள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே வாக்கி டாக்கி வாங்கியதில் 88 கோடி ரூபாய் ஊழல் நடைபெற்ற விவகாரத்தை அதிமுக அரசு மூடி மறைத்ததன் தொடர்ச்சியாக இந்த மெகா ஊழல் நிகழ்ந்துள்ளதாக தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். மாநிலத்தின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய காவல்துறைக்கு கேமரா, சிசிடிவி, டிஜிட்டல் மொபைல் ரேடியோ உள்ளிட்ட உபகரணங்கள் வாங்குவதில் கூட 350 கோடி ரூபாய் ஊழல் நிகழ்ந்திருப்பதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஒரு பக்கம் வாகனப் பற்றாக்குறையால் புலனாய்வுப் பணிகள் ஸ்தம்பித்து நிற்கும் அதேவேளையில், காவல்துறை நவீன மயமாக்கலுக்காக ஒதுக்கப்படும் நிதியில் இவ்வளவு பெரிய ஊழல் நிகழ்ந்திருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஆகவே காவல்துறை சம்பந்தப்பட்ட இந்த ஊழலையாவது லஞ்ச ஊழல் தடுப்புத்துறை நியாயமாக விசாரித்து உண்மைக் குற்றவாளிகள் எவ்வளவு உயர் பதவியில் இருந்தாலும் நீதிமன்றத்தின் முன்பு நிறுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் முதலமைச்சரின் துறையிலேயே இந்த ஊழல் நடைபெற்றுள்ளது என்பதால் சுதந்திரமாக விசாரணை நடத்தி ஊழல் பெருச்சாளிகளை அடையாளம் காட்ட வேண்டும் எனவும் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close