[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு: ப.சிதம்பரம் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீது நாளை தீர்ப்பு வழங்குகிறது டெல்லி உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகை, இந்தியா கேட் பகுதிகளில் காற்று மாசு அதிகரிப்பு; வாகன ஓட்டிகள் அவதி
  • BREAKING-NEWS லாக்-அப் என்கவுன்டர் விவகாரம்: எஸ்.ஐ. காளிதாஸுக்கு ஆயுள் தண்டனை விதிப்பு!
  • BREAKING-NEWS சென்னை மேயர் பதவிக்கு போட்டியிட உதயநிதி ஸ்டாலின் சார்பில் விருப்பமனு
  • BREAKING-NEWS ரஃபேல் தீர்ப்பு எதிர்க்கட்சியினருக்கு சரியான பதிலடி - உள்துறை அமைச்சர் அமித்ஷா
  • BREAKING-NEWS மனைவி நளினி மற்றும் உறவினர்களைப் பார்க்க முருகனுக்கு அனுமதி வழங்குக - உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS தென்பெண்ணையாற்றின் குறுக்கே கர்நாடகா அணை கட்டத் தடையில்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பு

பிறந்து இரு தினங்களே ஆன பச்சிளம் குழந்தையைக் கொன்ற தாய்

mother-killed-her-child-in-arani-hospital

திருவண்ணாமலை மாவட்டத்தில், பிறந்து 2 நாள்களே ஆன பச்சிளம் குழந்தையைக் கொலை செய்த தாயையும், அவரது காதலரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ஆரணி அருகே சேவூர் கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி குமாரின் மனைவி சோலையம்மாள். இந்தத் தம்பதிக்கு ஏற்கனவே 4 பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில், கடந்த 14 ஆம் தேதி ஆரணி அரசு மருத்துவமனையில் 5வது ஆக பெண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்தார் சோலையம்மாள். ஆனால், 16 ஆம் தேதி மருத்துவமனையிலிருந்து சோலையம்மாள் தலைமறைவானதால், மருத்துவர் ஆனந்தன் ஆரணி கிராமிய காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

அதன்பேரில், அவரைத் தேடி வந்த காவல்துறையினர், சென்னையில் சோலையம்மாளையும், அவரது காதலரான குமாரின் அண்ணன் பாபுவையும் கண்டுபிடித்தனர். விசாரணையில், முறையற்ற உறவில் பிறந்ததால், குழந்தையைக் கொன்றுவிட்டதாக அவர்கள் கூறியுள்ளனர். குழந்தையின் உடலை சேவூரில் உள்ள விளைநிலத்தில் புதைத்து விட்டதாகவும், கூறியுள்ளனர். இதையடுத்து, இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close