[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
  • BREAKING-NEWS குழந்தைகளை கடத்தி வைத்த புகாரில் நித்தியானந்தா மீது கிரிமினல் வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS 2021-ஆம் ஆண்டு தேர்தலில் தமிழக மக்கள் அதிசயம் நிகழ்த்துவார்கள்: ரஜினிகாந்த்
  • BREAKING-NEWS தமிழகத்தின் 33‌-ஆவது மாவட்டமாக இன்று உதயமாகிறது தென்காசி

நான்கு வழிச்சாலைக்காக இடிக்கப்பட்ட என்.எல்.சி ஆர்ச்

nlc-arch-broken-for-4-way-road-scheme-in-cuddalore

நான்கு வழிச்சாலை திட்டத்திற்கு இடையூறாக இருப்பதாக கூறி கடலூரி என்.எல்.சி ஆர்ச் இடிக்கப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி-வடலூர் நெடுஞ்சாலையில், நெய்வேலி நகரப்பகுதிக்கு செல்லும் நுழைவாயிலில் நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் (என்.எல்.சி) சார்பில் இரண்டு வளைவுகள் (ஆர்ச்) அமைக்கப்பட்டிருந்தது. இந்த வளைவுகள் என்எல்சி-ன் அடையாளமாக  பல ஆண்டு காலமாக திகழ்ந்து வந்தது. 

அந்த பகுதியும் 'ஆர்ச் கேட்' என்ற பெயரில் அழைக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இந்த இரண்டு ஆர்ச்சுகளில் ஒன்று நேற்று இடிக்கப்பட்டது. மற்றொன்றும் ஓரிரு நாட்களில் இடிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. விக்கிரவாண்டி - தஞ்சாவூர் நான்கு வழிச்சாலை திட்டத்திற்கு இடையூறாக வளைவுகள் இருப்பதால் இடிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close