[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS நாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS தொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS புரோ‌ கபடி லீக் தொடரில் பெங்கால் ‌வாரியர்ஸ் அணி ‌முதல் முறையாக சாம்பியன்‌. இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.

“பேனர் தடையால் கடனில் மூழ்கினேன்” - கடிதம் எழுதிவிட்டு வாலிபர் தற்கொலை முயற்சி

a-youngster-attempt-suicide-for-banner-bane-action-in-madurai

பேனர்கள் வைக்க விதித்ததால் வாங்கிய கடனை அடைக்க முடியவில்லை என தமிழக அரசுக்கும், நீதிமன்றத்துக்கும் கடிதம் எழுதிவிட்டு வாலிபர் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

மதுரை மாவட்டம் சமயநல்லூரை அடுத்த கீழ்மாத்தூரைச் சேர்ந்தவர் விக்னேஷ் (25). இவருக்கு கடந்த ஒன்றறை ஆண்டுக்கு முன் திருமணம் நடந்து 8 மாத குழந்தை உள்ளது. திருமணத்திற்கு முன் தனியார் வங்கியில் பணியாற்றி வந்த இவர், திருமணத்திற்கு பின் வங்கியில் 10 லட்சம் கடன் பெற்றும், தாய் மற்றும் மனைவியின் தங்க நகைகளை அடகு வைத்தும் 15 லட்சம் மதிப்பில் டிஜிட்டல் பிளக்ஸ், பேனர் பிரிண்டிங் செய்யும் இயந்திரம் வாங்கி சமயநல்லூரில் கடை வைத்து தொழில் நடத்தி வந்தார். இத்தொழில் மூலம் கிடைத்த வருவாயை வைத்து கடன் அடைத்துக்கொண்டும், குடும்பத்தையும் விக்னேஷ் நடத்தி வந்துள்ளார். 

இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன் சென்னையில் பேனர் விழுந்த விபத்தில் லாரி மோதி சுபஸ்ரீ என்ற உயிரிழந்தார். இதனை தொடர்ந்து நீதிமன்றம் பிளக்ஸ், பேனர்கள் வைப்பது தொடர்பாக கடுமையான சில உத்தரவுகளை பிறப்பித்தது. இதன் காரணமாக வங்கி கடனை திருப்பி செலுத்துவதில் ஏற்பட்ட சிக்கலால் கடந்த சில நாட்களாக மனஉளைச்சலில் இருந்ததாக விக்னேஷ் தெரிவித்திருக்கிறார். அத்துடன் நேற்று இரவு வீட்டில் இருந்தபோது விஷத்தன்மையுள்ள மருந்தை குடித்துள்ளார். 

விக்னேஷ் குடும்பத்தினர் அவரை மீட்டு சமயநல்லூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்ததுடன், மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தகவல் அறிந்த சமயநல்லூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்ட போது, தற்கொலைக்கு முன் விக்னேஷ் எழுதிய இரண்டு பக்க கடிதத்தை கைப்பற்றினர். 

அந்த கடிதத்தில் தமிழக அரசு மற்றும் நீதித்துறைக்கு இறுதி வணக்கம் எனத் தொடன்கும் விக்னேஷ், யாரோ ஒருவர் செய்த தவறுக்கு தங்கள் தொழிலுக்கு தடை விதித்துவிட்டதாகவும், தவறு செய்தவர் மீது இன்றளவும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். தங்களது உடன் பிறந்த தங்கை சுபஸ்ரீ உயிரிழப்பிற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இதற்காக பிளக்ஸ் அடித்த கடைக்கு சீல் வைப்பது எந்த வகையில் நியாயம் என்றும் தெரிவித்துள்ளார். வங்கி வாங்கிய கடனையும், வீட்டின் நகைகளை அடகு வைத்து பெற்ற கடனையும் தன்னால் திரும்ப செலுத்த முடியவில்லை என்று வருத்தத்துடன் கூறியுள்ளார். தனக்கு வந்த இந்த நிலை யாருக்கும் வரக்கூடாது, தமிழக அரசு இந்த விவகாரத்தில் நல்ல முடிவு எடுக்கும் என நம்பி 25 வயதில் தனது வாழ்வை முடித்து கொள்வதாக விக்னேஷ் எழுதியுள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close