[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பொறியியல் படித்தவர்கள் டெட் எனும் ஆசிரியர் தகுதி தேர்வு எழுதலாம் - தமிழக அரசு
  • BREAKING-NEWS அடுத்த ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக்கில் பங்கேற்க ரஷ்யாவுக்கு தடை
  • BREAKING-NEWS திருவண்ணாமலையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது: மாலையில் ஏற்றப்படும் மகா தீபத்திற்காக ஏற்பாடுகள் தீவிரம்
  • BREAKING-NEWS மக்களவையில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா நிறைவேறியது குறித்து பிரதமர் மோடி மகிழ்ச்சி
  • BREAKING-NEWS நீண்ட விவாதத்திற்கு பிறகு மக்களவையில் குடியுரிமை சட்ட திருத்த மசோதா நள்ளிரவில் நிறைவேற்றம்

‘ரேஷன் கடைகளில் கிலோ 33 ரூபாய்க்கு வெங்காயம்’ - செல்லூர் ராஜூ 

onion-will-be-sell-at-co-operative-stores-says-minister

தமிழகத்திலுள்ள கூட்டுறவு அங்காடிகளில் பெரிய வெங்காயம் கிலோ ரூ.33க்கு விற்பனை செய்யப்படும் என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

வெங்காயம் அதிகம் விளையும் மகாராஷ்டிரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் கனமழை காரணமாக விளைச்சல் குறைந்ததால் அதன் விலை கணிசமாக அதிகரித்துள்ளது‌. டெல்லியில் ஒரு கிலோ வெங்காயம் 70 முதல் 80 ரூபாய் வரையிலும், சென்னையில் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. 

சென்னையில் கடந்த வாரம் 35 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில் தற்போது 80 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்படுகிறது. வெங்காய விலை இரண்டு மடங்குக்கு மேல் உயர்ந்துள்ளது மக்களுக்கு கூடுதல் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள கூட்டுறவு அங்காடிகளில் பெரிய வெங்காயம் கிலோ ரூ.33க்கு விற்பனை செய்யப்படும் என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். 

இது குறித்து தெரிவித்துள்ள அமைச்சர் செல்லூர் ராஜூ, ''ஆந்திராவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயம் கிலோ ரூ.33க்கு விற்பனை செய்யப்படும். சென்னையில் 200 ரேஷன் கடைகளில் வெங்காயம் விற்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது'' என தெரிவித்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close