[X] Close
JUST IN
  • BREAKING-NEWS குடியுரிமை வழங்குவதில் இஸ்லாமியர்களை புறக்கணிப்பது மத அடிப்படையிலான மிக மோசமான பாகுபாடு - திருமாவளவன்
  • BREAKING-NEWS அயோத்தி வழக்கின் தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரிய மனு மீது நாளை உச்சநீதிமன்றத்தில் விசாரணை
  • BREAKING-NEWS குடியுரிமை மசோதாவுக்கு எதிராக அசாம், திரிபுராவில் போராட்டம் வலுக்கும் நிலையில் ராணுவ வீரர்கள் குவிப்பு
  • BREAKING-NEWS குடியுரிமை மசோதா நிறைவேற்றப்பட்டால், அது ஜனநாயகத்தின் கருப்பு பக்கமாக மாறிவிடும் - வைகோ
  • BREAKING-NEWS பிஎஸ்.எல்.வி ராக்கெட் வரிசையில் 50வது ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டதால் விஞ்ஞானிகள் மகிழ்ச்சி - இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS பிஎஸ்.எல்.வி-சி 48இல் சென்ற ரிசாட்-2பிஆர்1 செயற்கைக்கோள் வெற்றிகரமாக நிலைநிறுத்தம் - இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS இந்தியாவில் சட்டவிரோதமாக குடியேறியுள்ள வெளிநாட்டவர்கள் வெளியேற வேண்டும் - சஞ்சய் ராவத்

திமுக போராட்டத்திற்கு தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவு

chennai-hc-stay-to-dmk-protest

கோவையில் சொத்து வரி உயர்வைக் கண்டித்து திமுக கூட்டணி அறிவித்துள்ள போராட்டத்திற்கு உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

கோவையில் சொத்துவரியை உயர்த்தி மாநகராட்சி உத்தரவிட்டது. இதனைக் கண்டித்து வரும் 27-ஆம் தேதி முழு அடைப்பு போராட்டத்திற்கும், மறியல் போராட்டத்திற்கும் திமுக கூட்டணி கட்சிகள் அழைப்பு விடுத்திருந்தன. இதனிடையே திமுக கூட்டணியின் போராட்டத்திற்கு தடை விதிக்கக்கோரி கோவையை சேர்ந்த வழக்கறிஞர் தினேஷ்குமார் என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்நிலையில் திமுக கூட்டணியின் போராட்டத்திற்கு தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  உயர்நீதிமன்ற உத்தரவுபடியே சொத்துவரி உயர்த்தப்பட்டுள்ளது. உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து போராடுவது சட்டவிரோதம் எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close