உள்ளூர் விமானங்களில் தமிழில் அறிவிப்புகள் வெளியாக வலியுறுத்தி மத்திய அமைச்சரிடம் தமிழக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் மனு அளித்துள்ளார்.
டெல்லி சென்றுள்ள அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பல்வேறு மத்திய அமைச்சர்களை சந்தித்து துறை ரீதியான கோரிக்கைகளை முன் வைத்து வருகிறார்.
கீழடி அகழாய்வு பணிகள் குறித்து மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் பிரகலாத்தை நேற்று சந்தித்து ஆலோசனை நடத்தினார். மத்திய அரசின் ஆட்சிமொழி செயலாளர் அனுராதா மித்ராவை சந்தித்துப் பேசினார்.
இந்நிலையில், தமிழ்நாட்டில் இருந்து புறப்படும் மற்றும் வந்தடையும் விமானங்களில் தமிழில் அறிவிப்புகள் வெளியாக வேண்டும்” என்ற கோரிக்கையை வலியுறுத்தி மத்திய விமான போக்குவரத்துத்துறை செயலாளரிடம் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் மனு அளித்துள்ளார்.
“போலீஸ் செய்தது சரியே.. ஆனாலும்...?: தெலங்கானாவில் என்கவுன்ட்டர் செய்யப்பட்டவர்களின் குடும்பம்..!
ஆளுநர் பதவியா..? அதிபர் கோத்தபய ராஜபக்சவை ஆதரிப்பது ஏன்..? - முத்தையா முரளிதரன் பேட்டி
உள்ளாட்சித் தேர்தலுக்கான புதிய தேதி விரைவில் வெளியிடப்படும்: மாநில தேர்தல் ஆணையர்..!
9 மாவட்டங்களை தவிர்த்து உள்ளாட்சித் தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி
2008-லேயே ஆசிட் வீச்சுக்கு ‘என்கவுன்ட்டர்’ - சைபராபாத் ஆணையரின் பின்னணி..!