[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தின் 33-வது மாவட்டமாக உதயமானது தென்காசி
  • BREAKING-NEWS தமிழ்நாட்டில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
  • BREAKING-NEWS தமிழகத்தில் 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
  • BREAKING-NEWS குழந்தைகளை கடத்தி வைத்த புகாரில் நித்தியானந்தா மீது கிரிமினல் வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS 2021-ஆம் ஆண்டு தேர்தலில் தமிழக மக்கள் அதிசயம் நிகழ்த்துவார்கள்: ரஜினிகாந்த்

பட்டப்பகலில் கல்லூரி மாணவர் வெட்டிக் கொலை !

college-student-murdered-near-tuticorin

தூத்துக்குடியில் பட்டப்‌பகலில் கல்லூரி மாணவரை அடையாளம் தெரியாத கும்பல்‌ சரமாரியாக வெட்டிக் கொலை செய்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் சந்தையடியூரைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பவரின் மகன் அபிமன்யூ, செய்துங்கநல்லூரில் உள்ள சேவியர் பாலிடெக்னிக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து‌ வந்தார். வழக்கம்போல் கல்லூரிக்கு சென்ற அபிமன்யூ, மதிய உணவு இடைவேளையின்போது, சாப்பிடுவதற்காக இருசக்கர வாகனத்தில் வீட்டிற்குச் சென்றுள்ளார்.

அப்போது, நான்கு இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணிந்து வந்த கும்பல், கல்லூரி அருகிலேயே அபிமன்யூவை வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளது. இதில் தலை மற்றும் கழுத்தில் பலத்த காயம் அடைந்து சுருண்டு விழுந்த அபிமன்யூ, சம்பவ இடத்திலேயே உயிரிழந்‌தார். இதையடுத்து, அந்த கும்பல் தப்பிச் சென்றது.

தகவல் அறிந்து சென்ற காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் 3 மாதங்களில் மட்டும் 20பேர் கொலை செய்யப்பட்டிருப்பது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close