[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இலங்கையின் புதிய அதிபராக பொறுப்பேற்ற கோத்தபய ராஜபக்ச நவ.29 இந்தியா வருகை
  • BREAKING-NEWS ரஜினி, கமல், விஜய் சேர்த்து வந்தாலும் அதிமுக சிங்கிளாக எதிர்க்கும் - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS மக்களின் நலனுக்காக கமலுடன் இணையும் சூழல் ஏற்பட்டால் நிச்சயம் இணைவேன் - ரஜினிகாந்த்
  • BREAKING-NEWS அவசியம் ஏற்பட்டால் நானும், ரஜினியும் இணைவோம் - கமல்ஹாசன்
  • BREAKING-NEWS நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் சென்னை மருத்துவ மாணவரின் தந்தை சரவணனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்ற கிளை
  • BREAKING-NEWS மேயர் பதவிக்கான தேர்தலை மறைமுகமாக நடத்துவதற்கு அவசரச் சட்டம் கொண்டுவர தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு என தகவல்
  • BREAKING-NEWS உள்ளாட்சிகளில் உயர்த்தப்பட்ட சொத்துவரியை மறுபரிசீலனை செய்ய நிதித்துறை முதன்மை செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

பவாரியா போல் வடமாநில கொள்ளை கும்பல்: குறி வைத்து மடக்கிய போலீசார்!

chennai-police-arrested-the-thieves-in-madhya-pradesh

தமிழ்நாட்டை மிரட்டிய பவாரியா கொள்ளை கும்பலைப் போல், மற்றொரு வடமாநில கொள்ளை கும்பல் பிடிபட்டிருக்கிறது. 

தமிழ்நாட்டை அச்சுறுத்திய பவாரியா கொள்ளை கும்பலைப் போல், எந்த வகையான பூட்டையும் எளிதாக திறக்கும் அசாத்திய திறன் கொண்ட மற்றொரு கொள்ளைக் கும்பல், சென்னையில் கைவரிசை காட்டிவிட்டு தப்பிச் செல்லும்போது, மத்தியப் பிரதேசத்தில் கொத்தாக சிக்கியிருக்கிறது. கிரானைட் ஏற்றுமதியாளரான ரமேஷ், நங்கநல்லூரில் உள்ள எஸ்.பி.ஐ காலனியில் வசித்து வருகிறார். கடந்த 20ஆம் தேதி வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பிய ரமேஷின் குடும்பத்திற்கு அதிர்ச்சி காத்திருந்தது. பூட்டை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையர்கள், பீரோவில் இருந்த 120 சவரன் தங்க நகை, வைர நகைகள், வெள்ளிப் பொருட்கள், ‌ஒரு‌ லட்சம் ரூபாய் என மொத்தத்தையும் சுருட்டிக் கொண்டு தப்பியது தெரியவந்தது. 

சென்னையை பரபரப்பாக்கிய இச்சம்பவம் தொடர்பாக, கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா தலைமையில் 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. சற்றும் தாமதிக்காத காவல் அதிகாரிகள், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சியை ஆய்வு செய்தனர். அதில் சந்தேகப்படும்படியான 3 பேர், ரமேஷின் வீட்டிற்குள் சுவர் ஏறி குதிக்கும் காட்சிப் பதிவாகி இருந்தது. வீட்டில் பதிவாகி இருந்த கைரேகைகளின் அடிப்படையில், அவர்கள் வடமாநில கொள்ளை கும்பல் என்பதை தனிப்படைக் காவலர்கள் உறுதி செய்தனர். இதுகுறித்த விசாரணை தீவிரப்படுத்தப்பட்டபோது, கொள்ளையர்கள், மும்பை வழியாக மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூருக்கு செல்கிறார்கள் என்ற தகவல் தெரியவந்தது. 

மேலும், அவர்களில் சிலரின் செல்போன் எண்களும் தனிப்படைக்கு கிடைத்தன. அதனை துருப்புச்சீட்டாக வைத்து, விசாரணையை அடுத்தகட்டத்திற்கு நகர்த்தியபோது, கொள்ளை கும்பல், மத்தியப்பிரதேசத்தில் உள்ள உஜ்ஜயினிக்கு ரயிலில் சென்று கொண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த தகவலை உஜ்ஜயினி காவல்துறைக்கும், ரயில்வே பாதுகாப்புப் படைக்கும் தெரிவித்தது, தனிப்படை. 

உஷாரான மத்தியப்பிரதேச காவல்துறையினர், சரியாக திட்டமிட்டு, நாகுடா என்ற ரயில் நிலையத்தில் 10 பேர் கொண்ட கும்பலை சுற்றி வளைத்து கைது செய்தனர். இதையடுத்து மத்தியப்பிரதேச மாநிலம் விரைந்துள்ள தமிழ்நாடு தனிப்படைக் காவலர்கள், கொள்ளையர்களை விமானம் மூலமாக சென்னைக்கு கொண்டுவரும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். திருட்டு நடந்த 36 மணி நேரத்திற்குள் கொள்ளையர்களைக் கண்டறிந்த ‌தமிழ்நாடு தனிப்படைக்கு, பாராட்டு குவிந்து வருகிறது

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Related Tags : Chennai PoliceThievesTheftBawariyaBawariya theft
Advertisement:
Advertisement:
[X] Close