[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS தொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS புரோ‌ கபடி லீக் தொடரில் பெங்கால் ‌வாரியர்ஸ் அணி ‌முதல் முறையாக சாம்பியன்‌. இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.

மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த புகார் : போதை ஆசாமிகளுக்கு வலைவீச்சு

old-lady-harassment-in-madurai-police-search-2-culprits

மதுரையில் வீட்டின் வெளியே உறங்கிய மூதாட்டியை ஆட்டோவில் வந்த மர்ம நபர்கள் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். 

மதுரை மாவட்டம் சக்கிமங்கலம் நரிகுறவர் காலனியைச் சேர்ந்தவர் பச்சையம்மாள் (72) என்ற மூதாட்டி. இவர் நேற்று இரவு வழக்கம் போல் வீட்டின் வெளியே கணவருடன் உறங்கி உள்ளார். நள்ளிரவில் ஆட்டோவில் மதுபோதையில் வந்த 2 மர்ம நபர்கள் மூதாட்டியை கைகளை கட்டியும், வாயை பொத்தியும் தாக்கியுள்ளனர்.
 
பின்னர் வலுகட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதில் மூதாட்டியின் கை முறிவு ஏற்பட்டதுடன், அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. 

இதனைத் தொடர்ந்து சக்கிமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மூதாட்டிக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மருத்துவர்களின் பரிந்துரையால் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த சிலைமான் காவல்துறையினர், போதை ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close