[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நவம்பர் 18-ஆம் தேதி தொடங்குகிறது குளிர்கால கூட்டத் தொடர்
  • BREAKING-NEWS தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 3 நாட்களுக்கு பலத்த மழை பெய்ய வாய்ப்பு
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி பேரவை தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது
  • BREAKING-NEWS தொடர் மழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை; சிவகங்கை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

சென்னையில் கனமழை : சாலையில் ஓடும் மழைநீர்

heavy-rain-fallen-in-chennai

சென்னையில் பல்வேறு இடங்களில் ‌கனமழை பெய்ததால் சாலையில் மழை நீர் தேங்கி ஓடுகிறது. 

சென்னையில் திருவல்லிக்கேணி, ஆழ்வார்பேட்டை, தேனாம்பேட்டை, பெசன்ட் நகர், கோடம்பாக்கம், கிண்டி, போரூர் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது. தாம்பரம், குரோம்பேட்டை, மீனம்பாக்கம், பல்லாவரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் நகரின் பல்வேறு இடங்களில் முழங்கால் அளவு நீர் தேங்கியுள்ளது. சாலையிலும் நீர் வெள்ளம் போல் ஓடுகிறது. 

இதனால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் காற்றின் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடலூர், திருச்சி, திருவாரூர், திண்டுக்கல், கரூர் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் மழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Related Tags : ChennaiRainHeavy Rainமழைகனமழைசென்னை
Advertisement:
Advertisement:
[X] Close