[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பதவியை நீட்டிக்கக்கோரி பொன்.மாணிக்கவேல் உயர்நீதிமன்றத்தில் மனு
  • BREAKING-NEWS சென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கை சிபிஐ விசாரிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு
  • BREAKING-NEWS எங்கள் குடும்பத்தினருக்கான எஸ்பிஜி பாதுகாப்பை நீக்கியதும் அரசியலில் ஒரு அங்கம் தான் - பிரியங்கா காந்தி
  • BREAKING-NEWS மக்கள் அதிமுக பக்கம் இருப்பதால் ரஜினி கூறும் அதிசயம், அற்புதம் எங்களுக்கு சாதகமாகவே அமையும் - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS கூடங்குளம் போராட்டக்காரர்கள் மீதான வழக்குகளை அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் - மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS மறைமுகத் தேர்தல் முறை அதிகார துஷ்பிரயோகத்திற்கும், குதிரை பேரத்திற்கும் வழிவகுக்கும் - திருமாவளவன் எம்.பி.
  • BREAKING-NEWS 2021 ஆம் ஆண்டில் அதிமுக அரசு மலரும் என்பதையே அதிசயம் நிகழும் என்று ரஜினி கூறியிருக்கலாம் - முதல்வர் பழனிசாமி

“சிதம்பரத்திற்கு ஏற்பட்ட நிலைதான் ஸ்டாலினுக்கும் வரும்” - செல்லூர் ராஜூ

sellur-raju-speech-about-stalin-protest-announcement

இந்தி மொழிக்கு எதிராக திமுக போராடினால் ப.சிதம்பரத்திற்கு ஏற்பட்ட நிலைதான் ஸ்டாலினுக்கும் வரும் என மத்திய அரசு மிரட்டியதால் போராட்டத்தை நடத்தவில்லை என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

சென்னையில் உள்ள திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில், கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் உயர்நிலை செயல்திட்டக்குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் இந்தி ஆதிக்கத்தால் ஏற்படும் பாதிப்பை முளையிலேயே கிள்ளி எறிந்திட, கடந்த 20 ஆம் தேதி தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த திமுக சார்பில் முடிவு செய்யப்பட்டது. 

ஆனால், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை ஸ்டாலின் சந்தித்த பிறகு செப்டம்பர் 20-ல் திமுக நடத்தவிருந்த போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. 

இந்நிலையில், இந்தி மொழிக்கு எதிராக திமுக போராடினால் ப.சிதம்பரத்திற்கு ஏற்பட்ட நிலைதான் ஸ்டாலினுக்கு வரும் என மத்திய அரசு மிரட்டியதால் போராட்டத்தை நடத்தவில்லை என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

மேலும், “தமிழகத்தில் இந்தி மொழி கொண்டு வர கூடாது என போராடியவர் ஜெயலலிதா. இந்தி மொழிக்கு எதிராக ஏன் திமுக அறிவித்தபடி போராட்டத்தை நடத்தவில்லை என ஸ்டாலின் கூற வேண்டும். 2ஜி ஊழல், அலைக்கற்றை ஊழல், பிஎஸ்என்எல் வழக்கு மீண்டும் தூசி தட்டப்படுவதால் ஸ்டாலின் போராட்டத்தை வாபஸ் வாங்கியுள்ளார்” எனத் தெரிவித்தார். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close