[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 2020ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பொதுவிடுமுறை நாட்கள் பட்டியல் வெளியீடு - ஆங்கிலப்புத்தாண்டு, பொங்கல், தீபாவளி என மொத்தம் 23 நாட்களுக்கு பொதுவிடுமுறை
  • BREAKING-NEWS திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், தி.மலை, திண்டுக்கல், தேனி, நீலகிரி, கோவையில் மிக கனமழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை மையம்
  • BREAKING-NEWS மேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருவதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்
  • BREAKING-NEWS வங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு

14 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு

chance-for-heavy-rain-in-14-districts

தமிழகத்தின் 14 மாவட்டங்களில் நாளை கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நாளை திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுகோட்டை, வேலூர், ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையைப் பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், மிதமானது முதல் லேசான மழை பெய்வதற்கு வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, இன்று நாகை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்துள்ளது. வேளாங்கண்ணி, பூவைத்தேடி வேட்டைக்காரனிருப்பு, திருப்பூண்டி காமேஸ்வரம், விழுந்தமாவடி புதுப்பள்ளி, கிராமத்துமேடு, உள்ளிட்ட இடங்களில் மிதமான மழை பெய்தது. இதனால் சம்பா சாகுபடி பணியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close