[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நவம்பர் 18-ஆம் தேதி தொடங்குகிறது குளிர்கால கூட்டத் தொடர்
  • BREAKING-NEWS தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 3 நாட்களுக்கு பலத்த மழை பெய்ய வாய்ப்பு
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி பேரவை தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது
  • BREAKING-NEWS தொடர் மழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை; சிவகங்கை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
  • BREAKING-NEWS கவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி

“இரண்டு இடைத்தேர்தலிலும் போட்டி இல்லை” - டிடிவி தினகரன்

no-contest-in-two-constituency-by-elections-ttv-dhinakaran

நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அமமுக போட்டியி‌டாது என அக்கட்சியின் பொதுச் செய‌லாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு அக்டோபர் 21-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.  டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தேர்தல் தேதியை அறிவித்தார். இரு தொகுதிகளிலும், வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 24-ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதை அடுத்து விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுதியில் நடத்தை விதிகள் உடனடியாக நடைமுறைக்கு வந்தன.

இந்நிலையில் நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அமமுக போட்டியி‌டாது என அக்கட்சியின் பொதுச் செய‌லாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். பெங்களூருவில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தனி சின்னம் கிடைக்காததால் தேர்தலி‌ல் போட்டியில்லை என அறிவித்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close