[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS நாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS தொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS புரோ‌ கபடி லீக் தொடரில் பெங்கால் ‌வாரியர்ஸ் அணி ‌முதல் முறையாக சாம்பியன்‌. இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.

இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு: திமுக பொதுக்குழு ஒத்தி வைப்பு!

dmk-general-body-meeting-postponed

நாங்குநேரி, விக்ரவாண்டி தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து, திமுக பொதுக்குழு கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி தொகுதியில் எம்பியாக வெற்றி பெற்ற வசந்தகுமார், தனது நாங்குநேரி எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார். இதனால் அந்த தொகுதி காலியானது. இதேபோல் விழுப்புரம் மாவட்டம் விக்ரவாண்டி தொகுதி எம்எல்ஏ ராதாமணி காலமானதால் அந்த தொகுதியும் காலியானது.  இந்நிலையில் இந்த தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 21 ஆம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது.

 செப்டம்பர் 23 ஆம் தேதி வேட்பு மனுதாக்கல் தொடங்குகிறது. வேட்பு மனுக்கள் தாக்கல் செய்ய கடைசி நாள், செப்டம்பர் 30 ஆம் தேதி. வேட்பு மனு பரிசீலனை நடக்கிறது. மனுக்களை திரும்ப பெற அக்டோபர் 3 ஆம் தேதி கடைசி நாள். வாக்கு  எண்ணிக்கை முடிவுகள் 24 ஆம் தேதி வெளியிடப்படும். 

 இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா செய்தியாளர்களிடம் இதைத் தெரிவித்தார். 

இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் அக்டோபர் 6 ஆம் தேதி நடப்பதாக இருந்த திமுக பொதுக்குழு கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. வேறு தேதி, பின்னர் அறிவிக்கப்படும் என்று திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் தெரிவித்துள்ளார். 
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close