[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகம், புதுச்சேரியில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS திருச்சி பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடித்த நகைகளை முருகன் கும்பல் உருக்கி விற்றது அம்பலம்
  • BREAKING-NEWS பில்லூர் அணை நிரம்பியதால் பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை. 7 மாவட்டங்களில் கனமழை தொடரும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் இன்று மாலையுடன் முடிகிறது பரப்புரை
  • BREAKING-NEWS நாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு

“வாட்ஸ்அப் நிறுவனம் ஒத்துழைப்பதில்லை” - நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்

high-court-condemned-to-social-media-organizations

சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் தவறான தகவல்களுக்கு சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் பொறுப்பேற்க முடியாது என கூறுவதை ஏற்றுகொள்ள முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சைபர் குற்றங்களை தடுக்க சமூக வலைத்தள கணக்குகளுக்கு ஆதார் எண்ணை கட்டாயமாக்க கோரி ஆண்டனி கிளமெண்ட் ரூபின் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், பேஸ்புக், வாட்ஸ் அப்பிற்கு ஆதார் கட்டாயமாக்க கோரும் வழக்கை உயர்நீதிமன்றம் விசாரிக்கலாம் என்றும் இறுதி உத்தரவுகள் எதையும் பிறப்பிக்க கூடாது எனவும் அறிவுறுத்தியிருந்தது.

இந்நிலையில் இன்று இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் சேஷசாயி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மக்கள் தங்கள் கருத்துகளை பகிர ஒரு தளம் அமைத்து கொடுத்து விட்டு, அதில் பரப்பப்படும் தவறான தகவல்களுக்கு பொறுப்பேற்க முடியாது என வாட்ஸ் அப் நிறுவனம் கூறுவதை ஏற்றுகொள்ள முடியாது என நீதிபதிகள் தெரிவித்தனர்.

மேலும், வாட்ஸ் அப் நிறுவனத்திற்கு உலகளவில் ஒரு சட்டம் இருந்தாலும், இங்கு இந்தியாவின் சட்டத்தை பின்பற்ற வேண்டும் என்று தெரிவித்த நீதிபதிகள் சமூக வலைத்தளங்கில் பரப்பப்படும் தவறான தகவல்களால் பல பாதிப்புகள் ஏற்படுவதாக தெரிவித்தனர். காட்சி ஊடகங்களை கண்கானிக்கவும், கட்டுப்படுத்தவும் அமைப்பு இருப்பதை போல, சமூக வலைத்தளங்களை கட்டுப்படுத்த எந்த அமைப்பு இருக்கிறது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இதற்குப் பதிலளித்த மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர், சமூக வலைத்தளங்களை கண்காணிக்கவும், தவறான தகவல்களை கண்டெறியவும் மத்திய அரசு புதிய சட்டத்தை இயற்ற உள்ளதாகவும், தற்போது இறுதி முடிவெடுப்பதற்காக காத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அதேபோல, ட்விட்டர் மற்றும் பேஸ்புக் நிறுவனம் அரசுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதை போல வாட்ஸ் அப் நிறுவனம் வழங்குவதில்லை என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை அக்டோபர் 10-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close