[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நவம்பர் 18-ஆம் தேதி தொடங்குகிறது குளிர்கால கூட்டத் தொடர்
  • BREAKING-NEWS தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 3 நாட்களுக்கு பலத்த மழை பெய்ய வாய்ப்பு
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி பேரவை தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது
  • BREAKING-NEWS தொடர் மழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை; சிவகங்கை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

“நீட் ஆள்மாறாட்டத்துக்கு தமிழக அரசு காரணமல்ல ” - விஜயபாஸ்கர்

minister-vijayabaskar-said-about-neet-exam-forgery

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தது தொடர்பாக தேசிய தேர்வு முகமைதான் பதிலளிக்க வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேனி மருத்துவக்கல்லூரியில் ஒருவர் மாணவராக சேர்ந்ததை புதிய தலைமுறை கள ஆய்வு செய்து வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது. இந்த விவகாரம் தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், நீட் தேர்வில் நடந்த ஆள்மாறாட்டத்துக்கு தமிழக அரசு காரணமல்லை என்று தெரிவித்தார். அத்துடன் நீட் தேர்வை தமிழக அரசு நடத்தவில்லை; மத்திய அரசுதான் நடத்தியது என்றும் தெரிவித்தார். மேலும், நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தது தொடர்பாக தேசிய தேர்வு முகமைதான் பதிலளிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

முன்னதாக, நீட் நுழைவுத் தேர்வில் ஆள்மாற்றாட்டம் செய்து மும்பையில் தேர்வு எழுதியவரே கவுன்சிலிங்கிலும் கலந்து கொண்டது புதிய தலைமுறை கள ஆய்வில் அம்பலமாகியுள்ளது. தேனி மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற சான்றிதழ் சரிபார்ப்பின் போதும் மும்பையில் தேர்வு எழுதிய மாணவரே கலந்து கொண்டார் என தகவல் கிடைத்துள்ளது. கவுன்சிலிங்கிலும், சான்றிதழ் சரிபார்ப்பிலும் மும்பையில் தேர்வெழுதியவர் கலந்து கொண்ட நிலையில், கல்லூரியில் கடநநத ஆகஸ்ட் ஒன்றாம் தேதி வகுப்புகள் தொடங்கிய போது மாணவர் உதித் சூர்யா வகுப்புகளில் கலந்து கொண்டுள்ளார். 

இதனிடையே ஆள்மாறாட்ட புகார் மின்னஞ்சல் அனுப்பிய அசோக் கிருஷ்ணா என்ற பெயரில் யாரும் இல்லை எனத் தகவல் வெளியாகி இருக்கிறது. புகார் அளித்தது யார் என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close