[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS தொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS புரோ‌ கபடி லீக் தொடரில் பெங்கால் ‌வாரியர்ஸ் அணி ‌முதல் முறையாக சாம்பியன்‌. இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.

கல்லூரி முதல்வர் மீது பாலியல் புகார் தர சொல்லி தொந்தரவு - மாணவர்கள் போராட்டம்

chennai-ymca-physical-college-students-protest

சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. உடற்கல்வியியல் கல்லூரி முதல்வர் மீது பாலியல் புகார் அளிக்கக் கூறி, மாணவியை தொந்தரவு செய்வதாக மாணவர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர்.

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவி பேசும் ஆடியோவில், “ நான் ஒய்எம்சிஏ கல்லூரியில் தான் படிக்கிறேன். கல்லூரியில் நிறைய பேர் தவறு செய்து கொண்டிருந்தனர். அதனைக் கேட்கப்போன முதல்வரை எப்படியாவது வெளியேற்ற வேண்டும் என சிலர் நினைக்கின்றனர். நிறைய புகார் கொடுத்து பார்த்தும் முதல்வரை வெளியே அனுப்ப முடியலை.

இப்படி இருக்கையில் என்னையும், மற்றொரு பெண்ணையும் முதல்வருக்கு எதிராக பாலியல் புகார் கொடுக்க வற்புறுத்துறாங்க. கடைசி ஒரு மாதமாக இந்தத் தொந்தரவு நடைபெறுகிறது. இந்தப் பிரச்னையை இப்படியே விட்டுவிட்டால் கல்லூரி விடுதியில் இருக்கும் நிறைய பெண்கள் பாதிக்கப்படுவார்கள். அதனால் நான் தற்கொலை செய்து கொள்ளபோகிறேன். இதற்கு பின் வருகின்ற பெண்களும், ஆண்களும் பாதுகாப்பாக இருப்பார்கள். முதல்வர் இங்கே வர தயவு செய்து உதவி செய்யுங்க. இல்லையென்றால் நான் தற்கொலை செய்யப் போவதற்கு அர்த்தம் இல்லாமல் போய்விடும். வார்டன் செய்வது ரொம்ப தவறு. ” எனக் கூறியுள்ளார்.

இதனிடையே முதல்வர் மீது புகார் அளிக்கக் கூறி, மாணவியை தொந்தரவு செய்வதாக மாணவர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close