[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தென்னாப்ரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சதமடித்தார் ரோகித் ஷர்மா
  • BREAKING-NEWS காங்கிரஸ் அரசு முடக்கி வைத்திருந்த தேஜாஸ் போர் விமானம் பாதுகாப்பு படையில் சேவையாற்ற தயாராக உள்ளது - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS நாங்குநேரியில் பணப்பட்டுவாடா செய்ததாக இதுவரை 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன - நெல்லை ஆட்சியர்
  • BREAKING-NEWS தமிழகம், புதுச்சேரியில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS திருச்சி பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடித்த நகைகளை முருகன் கும்பல் உருக்கி விற்றது அம்பலம்

அக்.6 ஆம் தேதி திமுக பொதுக்குழுகூட்டம் - சட்டதிட்ட திருத்தம் குறித்து ஆலோசனை 

dmk-general-meeting-on-october-6th

திமுக பொதுக்குழு கூட்டம் அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தலைமையில் வரும் அக்டோபர் 6 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் அக்டோபர் 6 ஆம் தேதி காலை 10 மணிக்கு ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளது. கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் அன்பழகன் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற பொதுக்குழுவில் ஸ்டாலின் திமுக தலைவராக தேர்வு செய்யப்பட்டார். அதன்பிறகு ஸ்டாலின் தலைமையில் கூடும் முதல் பொதுக்கூட்டம் இதுவாகும். இந்த கூட்டத்தில் திமுகவின் சட்டதிட்ட திருத்தம் குறித்தும், கழக ஆகபணிகள் குறித்தும் தணிக்கைக்குழு அறிக்கை குறித்தும் ஆலோசிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close