[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஐஐடியில் தற்கொலை செய்த மாணவி பாத்திமாவின் தந்தை இன்று முதல்வர் பழனிசாமியை சந்தித்து பேச உள்ளதாக தகவல்
  • BREAKING-NEWS கும்பகோணத்தில்‌ பாதாளச்சாக்கடையில் தவறி விழுந்து தொழிலாளி உயிரிழப்பு
  • BREAKING-NEWS பயங்கரவாதத்தால் ஆண்டுக்கு 70 லட்சம் கோடி ரூபாய் இழப்பு: பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு

சென்னையில் கனமழையால் சுவர் இடிந்து விழுந்து பெண் உயிரிழப்பு

woman-death-for-heavy-rain-in-chennai

சென்னையில் கனமழை காரணமாக வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் நேற்றிரவு முதல் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. அண்ணா நகர், வடபழனி, கிண்டி, மீனம்பாக்கம், விருகம்பாக்கம், போரூர், செம்பரம்பாக்கம், குரோம்பேட்டை, தாம்பரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை நீடித்து வருகிறது. இதேபோல் சென்னையை அடுத்துள்ள மாதவரம், புழல், செங்குன்றம், சோழவரம், பொன்னேரி உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.


இந்நிலையில், சென்னை மண்ணடி ஐயப்பசெட்டி தெருவை சேர்ந்தவர் ஜெரினாபானு. இவர் ஒரு கோவிலுக்கு சொந்தமான இடத்தில் வீடுகட்டி வாழ்ந்து வந்தார்.  இதையடுத்து ஜெரினாபானு நேற்று தனது குழந்தைகள் மற்றும் தாயாருடன் வீட்டில் படுத்து தூங்கி கொண்டிருக்கும்போது கனமழை காரணமாக சுவர் இடிந்து விழுந்துள்ளது. இதில் ஜெரீனாபானு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மற்றவர்கள் காயம் ஏதும் ஏற்படவில்லை. 

தகவலறிந்து வந்த போலீசார் இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இடிந்து விழுந்த வீடு மிகவும் பழமைவாய்ந்த வீடு என தெரியவந்துள்ளது. 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close