[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு உடல்நலக்குறைவு: மருத்துவமனையில் அனுமதி
  • BREAKING-NEWS எல்லையில் பங்களாதேஷ் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச்சூடு: பிஎஸ்எஃப் வீரர் ஒருவர் உயிரிழப்பு
  • BREAKING-NEWS நாங்குநேரியில் ஆங்காங்கே சிதறிக்கிடந்த 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் பறிமுதல்: 5 பேரிடம் விசாரணை

“ஆளுநர் உறுதிமொழியை ஏற்று திமுக போராட்டம் ஒத்திவைப்பு” - மு.க.ஸ்டாலின்

dmk-protest-adjourned

இந்தி திணிப்பை எதிர்த்து 20-ஆம் தேதி திமுக நடத்தவிருந்த போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை மு.க.ஸ்டாலின் இன்று சந்தித்து பேசினார். இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், “ செப்டம்பர் 20-ல் ஏன் போராட்டம் நடத்தவுள்ளீர்கள் என ஆளுநர் கேட்டறிந்தார்.  நான் மத்திய அரசின் பிரதிநிதி. அதனால் மத்திய அரசு ஹிந்தியை எந்தநிலையிலும் திணிக்காது என ஆளுநர் உறுதியளித்துள்ளதாக” கூறினார். இதனையடுத்து செப்டம்பர் 20-ல் திமுக நடத்தவிருந்த போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாகவும் கூறினார்.

மேலும் பேசிய அவர், எந்த நிலையிலும் இந்தி திணிக்கப்பட்டால் அதனை திமுக எதிர்க்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close