[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நவம்பர் 18-ஆம் தேதி தொடங்குகிறது குளிர்கால கூட்டத் தொடர்
  • BREAKING-NEWS தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 3 நாட்களுக்கு பலத்த மழை பெய்ய வாய்ப்பு
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி பேரவை தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது
  • BREAKING-NEWS தொடர் மழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை; சிவகங்கை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
  • BREAKING-NEWS கவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி

பொதுவான மொழி இருந்தால் நல்லது; இந்தியாவில் வாய்ப்பில்லை - ரஜினி பேட்டி 

rajini-speech-about-hindi

இந்தியை திணித்தால் தமிழ்நாட்டில் மட்டுமல்ல தென்னிந்தியாவில் யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். 

சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், “எந்தவொரு நாட்டுக்கும் பொதுவான ஒரு மொழி இருந்தால் நாட்டின் வளர்ச்சிக்கு நல்லது. ஆனால், துரதிஷ்டவசமாக நம் நாட்டில் பொது மொழியை கொண்டு வர முடியாது. இந்தி மட்டுமல்ல எந்த மொழியையும் திணிக்கக் கூடாது. இந்தி மொழியை திணித்தால் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். தமிழ்நாட்டில் மட்டுமல்ல தென்னிந்தியாவிலும் சரி வட இந்தியாவிலும் யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ரசிகர்களை பேனர் வைக்க வேண்டாம் என்று ஏற்கனவே அறிவுறுத்தியுள்ளேன்." என்று தெரிவித்தார்.

 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close