[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி குறித்த பேச்சை திரும்பப் பெறமாட்டேன் - சீமான்
  • BREAKING-NEWS தூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி
  • BREAKING-NEWS ராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதத் தயாரா..? முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் சவால்
  • BREAKING-NEWS பிசிசிஐ தலைவராகிறார் கங்குலி... அனைத்து மாநில சங்கங்கள் ஏகமனதாக தேர்வு செய்கின்றனர்.

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் 

bomb-blast-threaten-for-chennai-high-court

சென்னை உயர்நீதிமன்ற பதிவாளருக்கு டெல்லியை சேர்ந்த ஹதர்ஷன் சிங் நாக்பால் என்பவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து கடிதம் எழுதியுள்ளார். 

கடந்த 9 ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்ற பதிவாளருக்கு கடிதம் ஒன்று வந்துள்ளது. அந்தக் கடிதத்தை டெல்லியை சேர்ந்த ஹதர்ஷன் சிங் நாக்பால் என்பவர் அனுப்பியிருக்கிறார். அதில், தானும் தனது மகனும் சேர்ந்து வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வெடிகுண்டு தாக்குதலில் ஈடுபடப்போவதாக தெரிவித்துள்ளார்.

மேலும், “நாங்கள் தடைசெய்யப்பட்ட அதாவது சர்வதேச காலிஸ்தான் ஆதரவு குழுவை சேர்ந்தவர்கள். நாங்கள் ஒரு மாநிலத்தில் இருக்கவில்லை. பல்வேறு மாநிலங்களில் சுற்றித்திரிகிறோம். எனது மொபைல் நெம்பரையும் மாற்றிக்கொண்டே இருக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து உரிய விசாரணை நடத்தக்கோரி உயர்நீதிமன்ற பதிவாளர் சென்னை காவல்துறை ஆணையருக்கும், மத்திய தொழில் பாதுகாப்புப்படைக்கும் இந்தக் கடிதத்தை அனுப்பியுள்ளார். இக்கடிதம் டெல்லியில் ஒரு முகவரியிலிருந்து வந்துள்ளதால் டெல்லி போலீசாரை தமிழக போலீஸ் அணுகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close