[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் சென்னை மருத்துவ மாணவரின் தந்தை சரவணனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்ற கிளை
  • BREAKING-NEWS மேயர் பதவிக்கான தேர்தலை மறைமுகமாக நடத்துவதற்கு அவசரச் சட்டம் கொண்டுவர தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு என தகவல்
  • BREAKING-NEWS உள்ளாட்சிகளில் உயர்த்தப்பட்ட சொத்துவரியை மறுபரிசீலனை செய்ய நிதித்துறை முதன்மை செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
  • BREAKING-NEWS சர்க்கரை ரேஷன் அட்டைகளை தகுதியின் அடிப்படையில் அரிசி ரேஷன் அட்டைகளாக மாற்றிக்கொள்ளலாம் - தமிழக அரசு
  • BREAKING-NEWS தூத்துக்குடி மக்களவை தேர்தல் வழக்கு: கனிமொழி தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS ஒடிசாவில் நடிகர் கமல்ஹாசனுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கினார் முதல்வர் நவீன் பட்நாயக்
  • BREAKING-NEWS சென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை தொடர்பாக விசாரணை நடத்த மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கேரளா விரைகின்றனர்

“ஒரு மொழியை திணித்தால் ஏற்க மாட்டோம்”- கமல்ஹாசன்

kamalhassan-speech-about-hindi-and-pon-rathakrishnan

பொன்.ராதாகிருஷ்ணன் மொழி மாறிவிட்டார் என நினைக்கிறேன் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.  

நாட்டின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும் என உள்துறை அமைச்சர் அமித் ஷா தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதையடுத்து தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனங்களையும், எதிர்ப்பையும் தெரிவித்தனர். அதுமட்டுமின்றி மத்திய அரசு தமிழர்கள் மீது இந்தியை திணிக்க நினைப்பதாகவும், தமிழை அழிக்க நினைப்பதாகவும் குற்றஞ்சாட்டினர். 

இதைத்தொடர்ந்து இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பொன்.ராதாகிருஷ்ணன், “நன்றி மறந்தவன் தமிழன். கொண்டாடத் தெரியாதவன் தமிழன். சமஸ்கிருதத்தை விட, பழமையான மொழி தமிழ் என பிரதமர் மோடி பேசியதை தமிழர்கள் கொண்டாடவில்லை” என்று தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் செய்தியாளர்கள் சந்திப்பின் போது இது குறித்து கருத்து தெரிவித்த மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன், பொன்.ராதாகிருஷ்ணன் மொழி மாறிவிட்டார் என நினைக்கிறேன் என்றார். மேலும் பேசிய அவர், ''தமிழர்களுக்கு கவலைதரும் விஷயங்களை பற்றி முதலில் விவாதிப்போம். பொதுத்தேர்வால் பள்ளிப்படிப்பை பாதியில் விட்டவர்கள் ஏராளம். 5 மற்றும் 8 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு வைப்பது குறித்து அரசியல் கட்சியை விட மாணவர்களிடம் கேட்டால் விளக்கம் கிடைத்துவிடும்.

மொழிப்போர் போராட்டத்திலும் பங்கெடுத்துள்ளேன். இந்தி மொழி படங்களிலும் நடித்துள்ளேன். படத்தில் நடிப்பது என் தனிப்பட்ட ஆர்வம். எத்தனை மொழிகளை வேண்டுமானாலும் ஏற்கத் தயார். ஆனால் இதுதான் மொழி என ஒரு மொழியை திணித்தால் ஏற்க மாட்டோம்” எனத் தெரிவித்தார்.  

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close