[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மு.க.ஸ்டாலின் மிசா சட்டத்தின் கீழ் கைதாகவில்லை என நான் கூறவில்லை - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்
  • BREAKING-NEWS மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலானதை எதிர்க்கட்சிகள் அரசியலாக்குகின்றன - உள்துறை அமைச்சர் அமித்ஷா
  • BREAKING-NEWS சென்னை ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் மரணம் குறித்து சிபிசிஐடி விசாரிக்க வேண்டும்; சாதி, மத ரீதியிலான பாரபட்சம் காட்டிய பேராசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஜவாஹிருல்லா
  • BREAKING-NEWS தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் ரூ.2,081 கோடி வாடகை பாக்கியை வசூல் செய்யாமல் ரூ.250 கோடியாக குறைக்க பேரம் நடப்பதாக தகவல் - ஸ்டாலின் ட்வீட்
  • BREAKING-NEWS டெல்லியில் காற்று மாசு காரணமாக மேலும் 2 நாட்களுக்கு பள்ளிகளை மூட வேண்டும் - டெல்லி அரசுக்கு மாநில மாசுக் கட்டுப்பாடு வாரியம் பரிந்து
  • BREAKING-NEWS உத்தர பிரதேசம்: காற்று மாசு காரணமாக கவுதம புத்தா நகர் மாவட்டத்தில் நவ.14, 15ஆம் தேதிகளில் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிப்பு

“காலாண்டு விடுமுறை ரத்து என்பது வதந்தி” - பள்ளிக்கல்வித்துறை விளக்கம்

no-changes-in-quarterly-exam-holidays-school-education

மாணவர்களுக்கான காலாண்டு தேர்வு விடுமுறையில் எந்த மாற்றமும் இல்லை என பள்ளிக்கல்வித்துறை விளக்கமளித்துள்ளது.

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளில் காலாண்டுத் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த தேர்வு முடிந்த பின்னர் அக்டோபர் 2ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். ஆனால் இந்த முறை  காந்தியின் 150வது பிறந்த தினத்தையொட்டி இந்த விடுமுறை ரத்து செய்யப்படுவதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. அத்துடன் விடுமுறை நாட்களில் மாணவர்களை பள்ளிக்கு வரவழைத்து காந்திய சிந்தனைகள் தொடர்பான வகுப்புகளை எடுக்க உத்தரவிடப் பட்டிருப்பதாகவும் தகவல்கள் கசிந்தன.

இந்நிலையில் விளக்கமளித்துள்ள பள்ளிக்கல்வித்துறை, மாணவர்களின் காலாண்டுத் தேர்வுக்கான விடுமுறையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என விளக்கமளித்துள்ளது. அத்துடன் காந்திய சிந்தனை சார்ந்த நிகழ்ச்சிகளை விருப்பமுள்ள பள்ளிகள் நடத்தலாம்
 என்றும், அதில் விருப்பமுள்ள மாணவர்கள் கலந்துகொள்ளலாம் கூறப்பட்டுள்ளது. மேலும், காலாண்டு விடுமுறை ரத்து என்பது தவறான தகவல் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close