[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நவம்பர் 18-ஆம் தேதி தொடங்குகிறது குளிர்கால கூட்டத் தொடர்
  • BREAKING-NEWS தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 3 நாட்களுக்கு பலத்த மழை பெய்ய வாய்ப்பு
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி பேரவை தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது
  • BREAKING-NEWS தொடர் மழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை; சிவகங்கை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

எப்படியாவது இந்தியை திணிக்க மத்திய அரசு முயற்சி: மு.க.ஸ்டாலின்

dmk-oppose-amit-shah-s-one-unifying-language

எப்படியாவது இந்தியை தமிழகத்தில் நுழைத்துவிட மத்திய அரசு முயற்சிக்கிறது என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

’இந்தி தினம்’ இன்று கொண்டாடப்படுவதை அடுத்து, ’ஒரே நாடு, ஒரே மொழி’ என்ற தலைப்பில் உள்துறை அமைச்சர் அமித்ஷா ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். ’’இந்தியா வெவ்வேறு மொழிகளைக் கொண்ட நாடு, ஒவ்வொரு மொழிக்கும் அதன் சொந்த முக்கியத்துவம் உண்டு, ஆனால் ஒட்டுமொத்த நாட்டுக்கும் ஒரே மொழி இருப்பது இந்தியாவுக்கான அடையாளமாக இருக்கும். இது உலகளவில் இந்தியாவின் அடையாளமாக மாற வேண்டும்.

இன்றைய தேதிக்கு, இந்தியாவை ஒருங்கிணைக்க வேண்டுமென்றால், அது பலராலும் பேசப்படும் இந்தி மொழியால் மட்டுமே முடியும்’’ என தெரிவித்துள்ளார்.

இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதுபற்றி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ’மத்தியில் ஆட்சி செய்யும் பாஜக அரசு, பல வித முயற்சிகளை செய்து எந்தப் பக்கத்தில் இருந்தாவது இந்தியை தமிழகத்தில் திணித்துவிட முடியாதா என்று முயற்சிக்கிறது’ என்று தெரிவித்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close