[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS தொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS புரோ‌ கபடி லீக் தொடரில் பெங்கால் ‌வாரியர்ஸ் அணி ‌முதல் முறையாக சாம்பியன்‌. இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.

தமிழகம், புதுச்சேரியில் இன்று மழைக்கு வாய்ப்பு

there-is-limited-chance-for-rainfall-over-tamil-nadu

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வெப்பச்சலனம் காரணமாக இன்றும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் அடுத்த 24 மணி நேரத்தில் கடலோர மாவட்டங்கள் மற்றும் அவற்றை ஒட்டிய மாவட்டங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் கடலூர், மதுரை, திருவாரூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் எனவும் வானிலை மையம் கூறியுள்ளது. 

இதற்கிடையே தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நேற்று பரவலாக மழை பெய்தது. வேலூர், ஆம்பூர், தூத்துக்குடி, விருதுநகர், ஈரோடு உள்ளிட்ட இடங்களில் பரவலாக மழை பெய்தது. புதுச்சேரியில் நேற்று காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில் இரவு திடீரென இடியுடன் பலத்த மழை பெய்தது. புதுச்சேரி நகரப்பகுதி மட்டுமின்றி அதனை சுற்றியுள்ள அரியாங்குப்பம், தவளக்குப்பம், பாகூர், மடுகரை, மதகடிப்பட்டு, திருக்கானூர், பத்துகண்னு, வில்லியனூர் ஆகிய கிராமப்புறங்களிலும் பலத்த மழை பெய்தது

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close