[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நவம்பர் 18-ஆம் தேதி தொடங்குகிறது குளிர்கால கூட்டத் தொடர்
  • BREAKING-NEWS தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 3 நாட்களுக்கு பலத்த மழை பெய்ய வாய்ப்பு
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி பேரவை தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது
  • BREAKING-NEWS தொடர் மழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை; சிவகங்கை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

வெங்காயத்தை இறக்குமதி செய்ய மத்திய அரசு முடிவு

union-govt-plan-to-import-onions

வெங்காயத்தின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த, வெளிநாடுகளிலிருந்து அவற்றை இறக்குமதி செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

வெங்காயம் அதிகம் விளையும் மகாராஷ்டிரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த மாதத்தில் பெய்த கனமழை காரணமாக அதன் உற்பத்தி குறைந்தது. இதனால் வரத்தும் குறைந்ததால், பல்வேறு பகுதிகளில் வெங்காயத்தின் விலை ஏறத் தொடங்கியது. எனவே விலையேற்றத்தைக் கட்டுக்குள் கொண்டுவர, வெங்காயத்தை இறக்குமதி செய்‌ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

அதற்காக கனிம, உலோகங்கள் வர்த்தக நிறுவனம் வெளிநாடுகளிலிருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்ய ஒப்பந்தம் கோரியுள்ளது. குறிப்பாக, பாகிஸ்தான்,சீனா, எகிப்து, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளிலிருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்ய ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் ஒரு கிலோ பெரிய வெங்காயம் 40 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close