[X] Close
JUST IN
  • BREAKING-NEWS குடியுரிமை மசோதாவுக்கு எதிராக அசாம், திரிபுராவில் போராட்டம் வலுக்கும் நிலையில் ராணுவ வீரர்கள் குவிப்பு
  • BREAKING-NEWS குடியுரிமை மசோதா நிறைவேற்றப்பட்டால், அது ஜனநாயகத்தின் கருப்பு பக்கமாக மாறிவிடும் - வைகோ
  • BREAKING-NEWS பிஎஸ்.எல்.வி ராக்கெட் வரிசையில் 50வது ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டதால் விஞ்ஞானிகள் மகிழ்ச்சி - இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS பிஎஸ்.எல்.வி-சி 48இல் சென்ற ரிசாட்-2பிஆர்1 செயற்கைக்கோள் வெற்றிகரமாக நிலைநிறுத்தம் - இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS இந்தியாவில் சட்டவிரோதமாக குடியேறியுள்ள வெளிநாட்டவர்கள் வெளியேற வேண்டும் - சஞ்சய் ராவத்
  • BREAKING-NEWS ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 10 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி-48 ராக்கெட்
  • BREAKING-NEWS இலங்கை, பூடான் நாடுகளை குடியுரிமை மசோதாவில் சேர்க்காதது ஏன்?- ப.சிதம்பரம் கேள்வி

வெங்காயத்தை இறக்குமதி செய்ய மத்திய அரசு முடிவு

union-govt-plan-to-import-onions

வெங்காயத்தின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த, வெளிநாடுகளிலிருந்து அவற்றை இறக்குமதி செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

வெங்காயம் அதிகம் விளையும் மகாராஷ்டிரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த மாதத்தில் பெய்த கனமழை காரணமாக அதன் உற்பத்தி குறைந்தது. இதனால் வரத்தும் குறைந்ததால், பல்வேறு பகுதிகளில் வெங்காயத்தின் விலை ஏறத் தொடங்கியது. எனவே விலையேற்றத்தைக் கட்டுக்குள் கொண்டுவர, வெங்காயத்தை இறக்குமதி செய்‌ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

அதற்காக கனிம, உலோகங்கள் வர்த்தக நிறுவனம் வெளிநாடுகளிலிருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்ய ஒப்பந்தம் கோரியுள்ளது. குறிப்பாக, பாகிஸ்தான்,சீனா, எகிப்து, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளிலிருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்ய ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் ஒரு கிலோ பெரிய வெங்காயம் 40 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close