[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி குறித்த பேச்சை திரும்பப் பெறமாட்டேன் - சீமான்
  • BREAKING-NEWS தூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி
  • BREAKING-NEWS ராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதத் தயாரா..? முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் சவால்
  • BREAKING-NEWS பிசிசிஐ தலைவராகிறார் கங்குலி... அனைத்து மாநில சங்கங்கள் ஏகமனதாக தேர்வு செய்கின்றனர்.

மெரினாவிலுள்ள கட்சிக்கொடிகள் அகற்றம் - நீதிமன்ற எதிரொலி

political-party-flag-removed-from-chennai-marina-beach

சென்னை மெரினா கடற்கரை சாலையில் உள்ள கட்சிக்கொடிகள் அகற்றப்பட்டு வருகின்றன.

சென்னை பள்ளிக்கரணையில் சாலையின் நடுவே வைக்கப்பட்டிருந்த பேனர் சரிந்து விழுந்ததில் இளம்பெண் சுபஸ்ரீ நிலைதடுமாறி சாலையில் விழுந்தார். அப்போது பின்னால் வந்த தண்ணீர் லாரி, சுபஸ்ரீ மீது மோதியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரித்து வருகிறது.

இதுதொடர்பான விசாரணையில், விதிகளை மீறி பேனர்கள் வைக்கமாட்டோம் என முதல்வர் அறிக்கை வெளியிடலாமே? என நீதிபதி கேள்வி எழுப்பினார். பேனர் வைக்கக் கூடாது என ஸ்டாலின் கூறினாலும் மக்களிடம் அதை ஏன் கொண்டு செல்லவில்லை? என்றும் கேள்வி எழுப்பினார்.

மேலும் பேனர் விபத்துகள் மூலம் இன்னும் எத்தனை லிட்டர் ரத்தம் தேவைப்படுகிறது? என வினவிய உயர்நீதிமன்றம், சென்னை மெரினா கடற்கரை சாலையில் உள்ள கட்சி கொடிகளை அகற்றவிட்டு நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் எனவும் கூறியது. சென்னையில் நடந்த பேனர் விபத்து விவகாரத்தில் மாநகராட்சி, காவல் அதிகாரிகள் ஆஜராகவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து சென்னை மெரினா கடற்கரை சாலையில் உள்ள கட்சிக்கொடிகள் அகற்றப்பட்டு வருகின்றன.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close