[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாடாளுமன்ற தேர்தலில் இருந்த கூட்டணியே தொடரும்; அரசியலில் எதுவும் நடக்கலாம் - துணை முதல்வர் ஓபிஎஸ்
  • BREAKING-NEWS ரஜினி, கமல், விஜய் அனைவரும் மாய பிம்பங்கள், தமிழக அரசியலில் எடுபடாத சக்திகள் - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக தனித்துப்போடியிட தயார் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
  • BREAKING-NEWS சபரிமலை கோயிலுக்கு என கேரள அரசு தனிச்சட்டம் உருவாக்க வேண்டும் - உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீது உச்சநீதிமன்றம் இன்று விசாரணை
  • BREAKING-NEWS தமிழகத்தில் பழைய சொத்துவரி முறையே தொடரும்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவிப்பு

இளம்பெண் சுபஸ்ரீ ஹெல்மெட் அணிந்திருந்ததாக போலீசார் தகவல்

police-told-subasree-wore-helmet

சென்னை பள்ளிக்கரணையில் பேனர் விழுந்து உயிரிழந்த இளம்பெண் சுபஸ்ரீ, ஹெல்மெட் அணிந்திருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்தவர் 22 வயது இளம்பெண், சுபஸ்ரீ. பொறியியல் பட்டதாரியான இவர் வீட்டிற்கு ஒரே பிள்ளை, பெற்றோருக்கு செல்லப்பிள்ளை. கந்தன்சாவடியில் உள்ள தனியா‌ர் நிறுவனத்தில் வேலை செய்துவந்த அவர், பணி முடிந்து இருசக்கர வாகனத்தில் புறப்பட்டு பள்ளிக்கரணை வழியாக வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

அந்த வழியாக சென்று கொண்டிருந்தபோது, சாலையின் நடுவே வைக்கப்பட்டிருந்த விளம்பர பேனர் ஒன்று திடீரென சரிந்து விழுந்திருக்கிறது. சுபஸ்ரீ இதை எதிர்பார்க்கவில்லை. நிலைதடுமாறி தவறி விழுந்த அவர் சாலையில் தூக்கி வீசப்பட்டார். அப்போது பின்னால் வந்த தண்ணீர் லாரி சுபஸ்ரீ மீது மோதியது. கண் இமைக்கும் நேரத்தில் நடந்து முடிந்த இந்தத் துயர சம்பவத்தில், ஒரு பாவமும் அறியாத சுபஸ்ரீயின் உயிர் அநியாயமாக பறிபோனது.

இதனிடையே இருசக்கர வாகனத்தில் சென்ற சுபஸ்ரீ, ஹெல்மெட் அணியவில்லை என சமூக வலைத்தளங்களில் செய்தி பரவியது. ஒருவேளை சுபஸ்ரீ ஹெல்மெட் அணிந்திருந்தால் அவர் உயிர் பிழைத்திருக்கலாம் என ஆங்காங்கே சிலர் கருத்து தெரிவிக்க ஆரம்பித்தனர். இந்நிலையில் உயிரிழந்த இளம்பெண் சுபஸ்ரீ, ஹெல்மெட் அணிந்தே இருசக்கர வாகனத்தில் சென்றதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இது ஒருபுறம் இருக்க இளம்பெண் உயிரிழப்புக்கு காரணமான பேனரை வைத்த அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் மீது பள்ளிக்கரணை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close