[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தேர்தல் விதிகளை மீறியதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS இடைத்தேர்தல் தேர்தலில் நாங்குநேரி - 66.10%, விக்கிரவாண்டி - 84.36% வாக்குப்பதிவு - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ
  • BREAKING-NEWS தொடர் மழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு - ஆட்சியர்
  • BREAKING-NEWS தீபாவளிக்கு மறுநாள் அக்.28ஆம் தேதி (திங்கள் கிழமை) அரசு விடுமுறை

அதிமுக பேனர் விழுந்து விபத்து : சென்னையில் இளம்பெண் பலி

23-year-old-die-in-accident-for-admk-banner-in-chennai

சென்னையில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளம்பெண் மீது பேனர் மேலே விழுந்ததில் நிலை தடுமாறி விழுந்ததால், தண்ணீர் லாரியில் சிக்கி அவர் உயிரிழந்தார்.

சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த இளம்பெண் சுபஸ்ரீ (23). இவர் பள்ளிக்கரணை அருகே சாலையில் சென்றுகொண்டிருந்தார். அந்த சாலையின் நடுவில் திருமண நிகழ்ச்சி ஒன்றிற்காக அதிமுக பிரமுகர் சார்பில் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. அவற்றில் ஒன்று சாலையில் சென்றுகொண்டிருந்த சுபஸ்ரீ மீது விழுந்தது. இதனால் இருசக்கர வாகனத்தில் சென்ற சுபஸ்ரீ நிலை தடுமாறி கீழே விழுந்தார். அப்போது, அவர் மீது தண்ணீர் லாரி ஒன்று ஏறி விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் அப்பெண் பரிதாபமாக உயிரிழந்தார். 

கனடா செல்வதற்கான தேர்வை எழுதிவிட்டு வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்த போது சுபஸ்ரீக்கு இந்த விபத்து ஏற்பட்டிருக்கிறது. தமிழகத்தில் சாலைகளின் நடுவே பேனர்கள் வைக்க நீதிமன்றம் தடை விதித்திருக்கும் நிலையில், பேனரால் ஒருபெண் உயிரிழந்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close